'நேசனல் ஜியோகிராபிக் பீ' போட்டியில் வெற்றி: 14 லட்சம் வென்ற இந்திய வம்சாவளி மாணவன்
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற்ற 'நேசனல் ஜியோகிராபிக் பீ' என்ற கடினமான புவியியல் போட்டியில் 12 வயது இந்திய வம்சாவளி மாணவன் சாத்விக் வெற்றி பெற்றுள்ளான்.
அமெரிக்காவில் உள்ள 'நேசனல் ஜியோகிராபிக்' என்ற அமைப்பு வருடந்தோறும் நடத்தி வரும் 'நேசனல் ஜியோகிராபிக் பீ' என்ற போட்டியில், இந்த ஆண்டு கிட்டத்தட்ட 50 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பல தகுதிச் சுற்றுகளைக் கொண்ட இதில் வெற்றி பெற்று இறுதி போட்டியில் 54 பேர் கலந்து கொண்டனர். முதல் இடத்தை இந்திய வம்சாவளி மாணவன் சாத்விக் கர்னிக் பெற்றார்.
அமெரிக்க போஸ்டன் நகரில் வசித்து வரும் சாத்விக், தற்போது 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் பெற்றோர் கடந்த 2002-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து அமெரிக்கா சென்று குடியேறியவர்கள். போட்டியில் உலகின் பல பகுதிகளில் உள்ள புவியியல் அமைப்பு பற்றி ஆழமான கேள்விகள் கேட்கப்படும். அத்தகைய கடினமான கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து சாத்விக் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
25 ஆயிரம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.14 லட்சம் கல்லூரி உதவித்தொகை இவருக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. ஈகுவடார் நாட்டின் காலாபகோஸ் தீவுகளை இலவசமாக சுற்றிப்பார்க்கும் வசதியும் இவருக்கு செய்து தரப்பட்டுள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, நேசனல் ஜியோகிராபிக் அமைப்பின் வாழ்நாள் உறுப்பினர் என்ற அங்கீகாரம் சாத்விக்கு வழங்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications