சிரிய அதிபர் பதவி விலகும் நிலை வந்தால் "திடீர் போருக்கு" தயாராகும் இஸ்ரேல்!

Subscribe to Oneindia Tamil

டெல்அவிவ்: சிரியா உள்நாட்டுப் போரின் முடிவில் அதிபர் ஆசாத் பதவி விலகும் நிலை ஏற்பட்டு அதிருப்தியாளர்கள் ஆட்சிக்கு வந்தால் உடனே 'ஆச்சரியப்படும் வகையிலான போர்' ஒன்றுக்கு தயாராக இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ச்சியாக அரசியல் குழப்பங்கள் நீடித்தே வருகின்றன. அரபு வசந்தம் என்றழைக்கப்படும் இந்த புரட்சி சிரியாவில் உச்சகட்டம் அடைந்திருப்பதுடன் அப்பிராந்தியத்தில் போர்ச் சூழலை அதிகரித்து வருகிறது. சிரியாதான் பாலஸ்தீன ஆயுத் குழுவினருக்கு ஏராளமான ஆயுதங்களைக் கொடுத்து வருகிறது என்பது இஸ்ரேலின் நீண்டகால குற்றச்சாட்டு. இந்த நிலையில் அண்மைக்காலமாக தங்களது நாட்டு ராணுவம் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் சம்பவங்களால் நிச்சயமாக போர் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேலிய விமானப் படை தளபதி வெளிப்படையாக சிரியாவுடன் போர் வெடிக்கும் என்று அறிவித்திருக்கிறார். இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்-ல் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கம் ஒன்றில் பேசிய இஸ்ரேலின் விமானப் படை தளபதி மேஜர் ஜெனரல் அமிர் எஸெல், சிரியாவில் ஏராளமான போர் விமானங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தற்போது நடைபெற்று வரும் கிளர்ச்சியில் போராளிக் குழுக்கள் அதிபர் பஷார் ஆசாத் வெளியேற்றப்படும் நிலையில் பெருமளவிலான ஏவுகணைகள் அவர்கள் கைகளுக்குப் போகும். இது இந்த பிராந்தியத்தில் பெரும் யுத்தத்தை உருவாக்கும். ஒருவேளை சிரியாவில் நாளையே ஆசாத் விலக நேரிட்டால் அதன் எதிர்விளைவுகளை இஸ்ரேலிய விமானப் படை மிகப் பெரிய அளவு எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்..

இஸ்ரேலிய ராணுவம் ஒன்றும் பலவீனமானது அல்ல. தற்போதைய மத்திய கிழக்கு நாடுகளின் குழப்பமான சூழலால் சிரியாவுடன் ஆச்சரியப்படும் வகையிலான ஒரு யுத்தத்தை இஸ்ரேல் நடத்தலாம் என்று அறிவித்திருக்கிறார்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+