மலேசியாவை உலுக்கிய நால்வர் கொலை... 4 தமிழர்களுக்கு மரண தண்டனை

பிரபலமான பெண் அழகுக் கலை நிபுணரும், தொழிலதிபருமான சோசிலாவதி லாவியா உள்ளிட்ட நான்கு பேர் 3 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு அப்போது அது பரபரப்பாக பேசப்பட்டது. அந்த வழக்கில்தான் தற்போது நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நீதிபதி ததுக் அக்தர் தஹிர் அளித்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் பத்மநாபன், அவரது பண்ணை வேலையாட்களான தில்லையழகன், மதன், காத்தவராயன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தூக்குத் தண்டனை அளிப்பதாகவும் அறிவித்தார்.
43 வயதான பத்மநாபன் வக்கீல் ஆவார். இவருக்கு பான்டிங் பகுதியில் ஒரு பண்ணை வீடு உள்ளது. அந்த வீட்டுக்கு கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி சோசிலாவதி, தனது வக்கீல் அகமது கமீல் கரீம், வங்கி அதிகாரியான நூரிஷாம் முகம்மது ஆகியோருடன் போயிருந்தார். இவர்களுடன் சோசிலாவதியின் கார் டிரைவர் கமருதீன் சம்சுதீனும் இருந்தார்.
ஆனால் நான்கு பேரும் பத்மநாபனின் பண்ணை வீட்டிலிருந்து காணாமல் போய் விட்டனர். திரும்பி வரவில்லை. இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டது. விசாரணையில், நான்கு பேரின் எலும்புக் கூடுகள் பண்ணைக்கு அருகே சிக்கி கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து பத்மநாபன் உள்பட நான்கு பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நில விவகாரம் தொடர்பாக நான்கு பேரையும் பத்மநாபன் கும்பல் கொலை செய்தது பின்னர் தெரிய வந்தது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications