அடடா, 'அங்க' போய் கடிச்சிட்டியேம்மா....!

Subscribe to Oneindia Tamil

கலிபோர்னியா: போன இடத்தில் சண்டையாகி, கணவருடைய ஆணுறுப்பை கடித்து விட்டார் மனைவி.. அமெரிக்காவில்தான் இந்த பரிதாபச் சம்பவம்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் ஆண்டணி ஹில். இவரது மனைவி பெயர் கிறிஸ்டினா சலினாஸ். இவர்களுக்கு நான்கு குழந்தைகளும் உள்ளனர். சலினாஸின் முன்னாள் கணவரும் இவர்களுடன் சேர்ந்தே வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று அனைவரும் ஒரு இடத்திற்குப் போயிருந்தனர். நீண்ட நேரம் அங்கு செலவழித்த பின்னர் வீடு கிளம்பலாம் என ஹில் கூறியுள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்த சலினாஸ், இன்னும் கொஞ்ச நேரம் கழித்துப் போகலாம் என்றார். ஆனால் நேரமாகி விட்டதாக கூறி கிளம்ப எத்தனித்தார் ஹில்.

இதனால் கோபமடைந்த சலினாஸ், ஹில் மீது பாய்ந்தார். கடுமையாக வாதிட்டார். பின்னர் கோபத்தில் கையைக் கடித்தார். அத்தோடு நில்லாமல், ஹில்லின் ஆணுறுப்பையும் பிடித்துக் கடித்து விட்டார்.

இதை எதிர்பாராத ஹில் அலறித் துடித்தார். அவரைக் காப்பாற்ற சலினாஸின் முன்னாள் கணவரும் முயன்றார். அப்போது அவருக்கும் அடி விழுந்தது. இருப்பினும் அதைச் சமாளித்து ஹில்லிடமிருந்து அவரை விலக்கி விட்டார் முன்னாள் கணவர்.

அதன் பின்னர் ஹில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆணுறுப்புக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லையாம். இருந்தாலும் பல் பதிந்து விட்டதால் மருந்து போட்டுள்ளனராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+