கருணாநிதி, மு.க. ஸ்டாலின் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் வழக்கறிஞர் புகார்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது மகனும், கட்சியின் பொருளாளருமான மு.க.ஸ்டாலின் மீது வழக்கறிஞர் பி.வி.செல்வகுமார் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பி.வி.செல்வகுமார் என்பவர் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 19.5.2013 அன்று திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் அதன் கட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், எம்.பி. கனிமொழி ஆகியோரும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் திமுக பெண் பேச்சாளர் காரல் மார்க்ஸ் என்பவ, முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளும் கூட்டத்தில் மனித வெடிகுண்டாக மாறவும் நான் தயாராக இருக்கிறேன் என்று பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.
இது சம்பந்தமான செய்தி 26.5.2013 நாளிட்ட வாரம் இருமுறை வெளிவரும் பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்துள்ளது.
எனவே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், பயங்கரவாதத்தை தூண்டும் வகையிலும், கொலைவெறி நோக்கத்தோடு காரல் மார்க்ஸ் பேசியுள்ளார். இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் திமுக பேச்சாளர் காரல் மார்க்ஸ் தொடர்புடைய பயங்கரவாத சக்திகளின் தொடர்பை தீர விசாரித்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
-
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக












Click it and Unblock the Notifications