மதிமுக தொண்டரின் ஆட்டோவில் சவாரி செய்த வைகோ
நெல்லை: நெல்லை சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அங்குதனது கட்சிக்காரரின் ஆட்டோவில் பயணம் செய்து அவரை மகிழ்வித்தார்.
நெல்லையில், நெல்லை புறநகர், நெல்லை மாநகர் மற்றும் குமரி மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் பங்குபெறும் தேர்தல்நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் வைகோ கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் நிதி வசூலிப்பதற்குரிய ரசீதுப் புத்தகங்களை வழங்கி உரையாற்றினார்.

பின்னர் தலைவர் கூட்டம் முடிந்து திருச்சி புறப்படும் நேரத்தில் மீனவர் அணி துணை அமைப்பாளர் அகஸ்டின் பெர்ணாண்டோ தாங்கள் ஆட்டோவில் வைகோ பயணிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதை ஏற்ற வைகோ தனது தொண்டரின் ஆட்டோவில் பயணித்தார். அந்த ஆட்டோ முழுவதும் தனது புகைப்படங்களே அதிகமாக இருப்பதை கவனித்த வைகோ இப்படி எனது புகைப்படமாக வைத்து இருந்தால் மாற்றுக்கட்சி நண்பர்கள், ஆட்டோவில் பயணிக்க சங்கடப்படுவார்கள் இது வேண்டாமே என்று கடிந்து கொண்டார்.
அதற்கு அகஸ்டின் வைகோவிடம் கூறுகையில், பொதுமக்களிடம் மதிமுக தொண்டன் என்ற முறையில் அதிக நம்பகத்தன்மையை பெறுவதாகவும், தன்னிடம் மாற்றுக் கட்சி நண்பர்கள் அரசியல் சூழ்நிலை தற்போது தூய்மையற்ற நிலையில் மாறிவிட்டது, இந்தநிலையில் வைகோ போன்ற தலைவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது மற்ற அரசியல் கட்சித்தலைவர்களும் நேர்மை சார்ந்த அரசியலுக்கு திரும்ப வேண்டும், வைகோ போன்ற தலைவர்கள் பெரிய இடத்திற்கு வளர வேண்டியது தமிழ்நாட்டு அரசியல் நிலை திருந்துவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்று பாராட்டுவதாகவும் கூறினார்.
அதைக் கேட்ட வைகோ புன்னகையுடன் அகஸ்டினைப் பாராட்டினார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications