''டேய் தம்பி நீ டுபாக்கூருடா.. நான்தாண்டா ஒரிஜினல் கரடி..'
மின்னசோட்டா: அமெரிக்காவின் மின்னசோட்டாவில் ஒரு சிறுவன் கரடியிடம் 'சிக்கி' பத்திரமாக மீண்டு வந்துள்ளான்.
சின்னக் குழந்தைகளுக்கு இன்ன டிரஸ்தான் போடுவது என்றில்லை. வித்தியாசமாக போடுகிறோம் என்று விதம் விதமான விலங்குகளைப் போல டிரஸ் போட்டு அழகு பார்க்கிறார்கள் பெற்றோர்கள்.
இப்படித்தான் அமெரிக்காவின் மின்னசோட்டா நகரைச்சேர்ந்த ஒரு சிறுவனுக்கு கரடி டிரஸ் போட்டு நிஜக் கரடியிடம் கொண்டு போய் விட்டனர் அவனது பெற்றோர்.

ஒரு ஊர்ல ஒரு கரடியாம்
மின்னசோட்டாவில் ஒரு விலங்கியல் பூங்கா உள்ளது. அந்த பூங்காவுக்கு தனது பெற்றோருடன் போயுள்ளான் ஒரு சிறுவன். அங்கு கரடிகள் பிரபலம்.

ஹலோ நான்தான் பியர்.. போலார் பியர்
அந்த சிறுவன் துருவக் கரடியைப் போன்ற ஃபர் டிரஸ் அணிந்து அச்சு அசல் கரடி போலவே காணப்பட்டான். ஆனால் அவனுக்கு எதிரே வந்து திடீரென நின்றது ஒரிஜினல் கரடி ஒன்று.

10 அடி உயரத்தில்
அந்தக் கரடி 10 அடி உயரத்தில் இருந்தது. பயங்கர எடை வேறு. வாயில் கூர்மையான பற்கள்... கடித்தால் ஒரே கடியில் ஆளே காலி. அப்படி ஒரு கரடி எதிரே வந்து நின்றால் எப்படி இருக்கும்..

பயமா.. எனக்கா
ஆனால் அந்த சிறுவன் பயப்படவே இல்லை. படு தைரியமாக நிமிர்ந்து ஒரிஜினலை உற்றுப் பார்த்தான். நிஜக் கரடியும், இந்த டுபாக்கூர் கரடியும் நேருக்கு நேர் சந்தித்த காட்சியை அங்கிருந்த கெல்லி லில்லிபிரிட்ஜ் என்பவர் அப்படியே தனது செல்போன் கேமராவில் பதிவு செய்தார்.

பயந்துட்டீங்களா.. கண்ணாடிக்கு உள்ளேதான் கரடி
சரி இப்ப உண்மையைச் சொல்றோம்.. உண்மையில் கரடி நேரில் வந்து சிறுவன் முன்பு நிற்கவில்லை. மாறாக ராட்சத கண்ணாடி வேலிக்கு வெளியில் இருந்துதான் அந்த சிறுவன், நிஜக் கரடியை பார்த்தான்....
இருந்தாலும் நேருக்கு நேர் சந்திப்பு என்பதுதான் நியூஸ் இல்லையா... அந்த வகையில் சிறுவனின் தைரியத்தையும் பாராட்டியாக வேண்டும்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications