குருநாத் கைது...ஒரு தந்தையாக, மாமனாராக, கடினமான ஒரு சூழல்: என்.சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

BCCI President N Srinivasan clarifies his position on recent controversies
கொல்கத்தா/சென்னை: ஐபிஎல் பெட்டிங் விவகாரத்தில் தமது மருமகன் குருநாத் கைது செய்யப்பட்ட போது தாம் ஒரு தந்தையாக, மாமனாராக ஒரு கடினமான சூழலை எதிர்கொண்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் என்.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் அதன் தலைவரான எனக்கும் கடந்த சில நாட்களாக கடின்மான ஒரு சூழல்தான். இந்த நாட்களில் ஒரு தந்தையாக, மாமனார் என்ற வகையிலும் மிகவும் கடினமானதாகத்தான் இருக்கிறது. நான் இந்திய பிசிசிஐ தலைவராக இருக்கும் போது எனது சொந்த உணர்வுகளை வெளியே விட்டுவிட்டுத்தான் வருவேன். நான் என் கடமைகளில் இருந்து ஒதுங்கிவிட முடியாது. பி.சி.சி.ஐ., மற்றும் ஐ.பி.எல். விதிமுறைகளை மீறும் அணி அல்லது அணி நிர்வாகிகள் அல்லது வீரர்கள் மீது எந்த ஒரு பாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீசாந்த், சவான், சண்டிலா, அமித் சிங் ஆகியோர் மீதான புகார்கள் தொடர்பாக பி.சி.சி.ஐ., ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தியது. அந்த விரைவில் அறிக்கை வெளியிடப்படும். மேலும் சில வீரர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்.

குருநாத்தை பொறுத்தவரை சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. அவர் போலீஸ் விசாரணையை சந்தித்து வருகிறார். கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் இவர் ஈடுபட பி.சி.சி.ஐ., தற்காலிக தடை விதித்துள்ளது. அதுவும் குறிப்பாக சென்னை அணியில் அவர் தலையிட இயலாது. அவர் விதிமுறைகளை மீறி செயல்பட்டாரா என்பது பற்றி மூன்று நபர் அடங்கிய கமிஷன் விசாரிக்கும். இதில் இருவர் ஐ.பி.எல்., அமைப்பை சார்ந்தவர்கள். மற்றொருவர் பி.சி.சி.ஐ.,க்கு தொடர்பு இல்லாத சுதந்திரமான நபராக இருப்பார். அவரது நியமனத்தில் எனது பங்கு இருக்காது. பி.சி.சி.ஐ., அல்லது ஐ.பி.எல்., அமைப்புக்கு குருநாத் அவமதிப்பு ஏற்படுத்தினாரா என்பது பற்றி விசாரிக்கப்படும்.

சென்னை உரிமையாளரா குருநாத்?

யாராக இருந்தாலும் ஐ.பி.எல் விதிமுறைகளை மீறி இருந்ததும் தவறு செய்ததும் உறுதி செய்யப்பட்டால் அபராதம், தண்டனை மற்றும் அதிகபட்சமாக சம்பந்தப்பட்ட அணி நீக்கப்படும். ஊடகங்கள் பிசிசிஐக்கும் ஐபிஎல் அணிகளுக்கும் இடையேயான 11.3வது சரத்து பற்றி அதிகமாக கருத்து தெரிவித்து வருகின்றன. ஆனால் குருநாத் தான் சென்னை அணியின் உரிமையாளரா? என்பதை கமிஷன்தான் கண்டுபிடிக்க வேண்டும். பி.சி.சி.ஐ.,யால் புறக்கணிக்கப்பட்டவர்கள் மற்றும் சிலர் சேர்ந்து எனக்கு எதிராக செயல்படுகின்றனர். பி.சி.சி.ஐ., ஒற்றுமையாக இருக்கிறது. என்னை யாரும் ராஜினாமா செய்ய சொல்லவில்லை. எனக்கு முழு ஆதரவு இருக்கிறது. என்னை யாரும் மிரட்டி பதவி விலகச் செய்ய முடியாது. பி.சி.சி.ஐ தலைவராக எனது பணியை தொடரும் முடிவில் உறுதியாக உள்ளேன். ஐ.பி.எல்., என்பது இளம் இந்திய வீரர்களுக்கு வரப்பிரசாதம். இதன் மூலம் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் சீனியர் மற்றும் வெளிநாட்டு வீரர்களுடன் சேர்ந்து விளையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. 200க்கும் மேற்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஒருமுறை பலன்பெறக் கூடிய வகையில் ஐபிஎல் பயன்பட்டுள்ளது. ஐ.பி.எல்., மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+