பலாத்காரம்: பாதிக்கப்பட்ட பெண்களின் கன்னித் தன்மை சோதனைக்கு மாற்று வழிகள்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: பொதுவாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படும் பெண்களுக்கு, கன்னித்தன்மையை சோதிக்க கை விரல்களை பயன்படுத்துவது டாக்டர்கள் வழக்கம். ஆனால், தற்போது இதற்கு தடை விதித்து வேறு விதமான முறைகளில் சோதனைகள் மேற்கொள்ள சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த நவீன யுகத்திலும், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண்களுக்கு நடத்தப்படும் சோதனைகள் பழமையான முறையிலேயே உள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணின் கன்னித்திரை கிழிந்துள்ளதா என சோதனை செய்ய இரு விரல்களை டாக்டர்கள் பயன்படுத்துகின்றனர்.
டாக்டர்களின் இத்தகைய சோதனையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேலும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கஷ்டமே ஏற்படுகிறது. எனவே, இரு விரல் சோதனையை தடை செய்ய வேண்டும் எனறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்து நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மற்றும் எம்.எம்.கலிபுல்லா ஆகியோர் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில்,"பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணின் உண்மை நிலை மற்றும் கன்னித்தன்மையைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் இரு விரல் சோதனை சந்தேகமே இல்லாமல் அந்தப் பெண்ணின் தனித்தன்மைக்கும் உடலுக்கும் மனதிற்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. பெண்ணின் மரியாதையை சீர்குலைக்கும், அத்தகைய சோதனை கை விடப்பட வேண்டும்.
மருத்துவ அறிவியல் வளர்ந்துள்ள இந்தக் காலகட்டத்தில் இது போன்ற முறையில் நடத்தப்படும் சோதனைகள் ஆய்வுகள், பாதிக்கப்பட்ட பெண்களின் துயரத்தை மேலும் தீவிரமாக்குகின்றன. சோதனை மற்றும் அதன் முடிவுகள் நேர்மறையாக இருந்தாலும் சோதனையால் அந்தப் பெண் அனுபவிக்கும் வேதனை அதிகமாகத் தான் இருக்கும். எனவே, மாற்று வழிகள் சோதனை முறைகளை பின்பற்றப்பட வேண்டும்."என தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications