மெய்யப்பனைப் பார்க்க தனி விமானத்தில் கிளம்பிய தாயார், மனைவி!
மதுரை: சூதாட்டப் புகாரில் சிக்கி கைதாகி மும்பை சிறையில் உள்ள குருநாத் மெய்யப்பனைப் பார்க்க அவரது தாயார் லலிதா மற்றும் மனைவி ரூபா ஆகியோர் தனி விமானத்தில் மும்பை சென்றனர்.
கோடை விடுமுறையைக் கழிக்க குடும்பத்துடன் பிசிசிஐ தலைவர் சீனிவாசன், அவரது மருமகன் குருநாத் கொடைக்கானல் சென்றிருந்த போதுதான் இந்த சூதாட்ட சர்ச்சை விஸ்வரூபம் எடுத்தது.
இதைத் தொடர்ந்து மும்பை போலீஸ் குருநாத்துக்கு சம்மன் அனுப்ப, அவர் கொடைக்கானலிலிருந்து மதுரை வந்து, அங்கிருந்து விமானத்தில் மும்பை சென்று விசாரணைக்க ஆஜராகி, சூதாட்டத்தில் தனக்கிருந்த தொடர்பை ஒப்புக் கொண்டார். உடனடியாக கைது செய்யப்பட்டார். நாளை வரை அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மெய்யப்பனின் தாயார் லலிதா மற்றும் மனைவி ரூபா ஆகிய இருவரும் திங்கள்கிழமை மாலை கொடைக்கானலில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு வந்தனர்.
பின்னர் இருவரும், மாலை 6.50 மணியளவில் தனி விமானத்தில் மும்பைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
இவர்கள் குருநாத் மெய்யப்பனை சந்திக்கிறார்கள். அப்போது இவர்களிடம் மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டால் அதற்கு ஒத்துழைப்பதற்காக மும்பை போலீசுக்கு உறுதி அளித்துள்ளார்களாம்.
ரூபா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர். இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications