Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலின் ஆழத்தில் உலா வரும் ‘செயற்கை வால்’ கடல்கன்னி...

Subscribe to Oneindia Tamil

சிட்னி: ஸ்பிளாஷ் என்ற திரைப்படத்தைப் பார்த்து அதில் கடற்கன்னியாக நடித்த டெரைல் ஹன்னாவைப் பார்த்து ஆச்சரியப்பட்டு அவரைப் போலவே தானும் கடற்கன்னியாக அவதாரம் எடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹன்னா பிரேசர்.

36 வயதான பிரேசர், செயற்கையான வாலைப் பொருத்திக் கொண்டு கடலுக்குள் பல்வேறு ஜாலங்களைச் செய்கிறார். சுறா மீன்களுடன் போட்டி போட்டுக் கொண்டு கடலுக்குள் அவர் நீந்தி விளையாடுவதை பலரும் பீதியோடு பார்க்கின்றனர்.

பிரேசர் ஒரு ஆழ்கடல் நீச்சல் வீராங்கனை ஆவார். அவர் தற்போது கடற்கன்னி அவதாரம் எடுத்து மேலும் திரில்லான சாதனைகளைச் செய்து வருகிறார்.

சின்னஞ் சிறு வயதில்..

சின்னஞ் சிறு வயதில்..

3 வயதாக இருக்கும்போதே கடற்கன்னிகள் மீது் அதிக ஆர்வம் கொண்டிருந்தார் பிரேசர்.

9 வயதில் வால் பிடித்தார்

9 வயதில் வால் பிடித்தார்

9 வயதானபோது உண்மையான கடற்கன்னியாக அவர் மாறிப் போனார். அதாவது கடற்கன்னிகளுக்கு இருப்பதைப் போன்ற வாலை உருவாக்கி தனது உடலில் பொருத்திக் கொண்டு நீச்சலடிக்க ஆரம்பித்தார்.

திமிங்கலம் ஒருபக்கம்... சுறா மறுபக்கம்

திமிங்கலம் ஒருபக்கம்... சுறா மறுபக்கம்

இப்போது திமிங்கலம், சுறா, டால்பின் போன்ற பெரிய சைஸ் மீன்களுக்குப் போட்டியாக, சற்றும் பயமின்றி ஆழ்கடலில் அற்புதம் செய்து வருகிறார் பிரேசர்.

நடிகை... மாடலும்

நடிகை... மாடலும்

வெறும் நீச்சல் வீராங்கனையாக மட்டும் அல்லாமல், நடிகையாக, மாடல் அழகியாகவும் இருக்கிறார் பிரேசர்.

45 அடி ஆழத்தில் தம் கட்டி..

45 அடி ஆழத்தில் தம் கட்டி..

கடலில் 45 அடி ஆழம் வரைக்கும் கூட படு தைரியமாக போய் வருகிறார் பிரேசர். தம் கட்டி சில நிமிடங்கள் வரை உள்ளேய இருக்கிறார். உண்மையான கடற்கன்னியைப் பார்ப்பது போலவே இருக்கிறது பிரேசரைப் பார்க்கும்போது.

திமிங்கலங்களுடன்

திமிங்கலங்களுடன்

வாவா தீவுப் பகுதியில் திமிங்கலங்கள் அதிகம். அந்தக் கடல் பகுதியி்ல திமிங்கலங்களுடன் சேர்ந்து இவரும் நீச்சலடித்த காட்சியைப் பார்த்து பலரும் உறைந்து போயினர். திமிங்கலங்களைக் கொல்வதைக் கண்டித்து இந்த சாதனை நீச்சலைச் செய்தாராம் பிரேசர்.

டால்பின்களுக்கு ஆதரவாக

டால்பின்களுக்கு ஆதரவாக

அதேபோல 2007ம்ஆண்டு டால்பின்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து ஜப்பானின் தைஜி கடல் பகுதியில் 30 பேருடன் சேர்ந்து ஆழ்கடல் நீச்சலடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். அப்போதும் கடற்கன்னி வேஷம்தான்.

ஸ்விமிங் போட்டு சுறாவை மிரட்டியவர்

ஸ்விமிங் போட்டு சுறாவை மிரட்டியவர்

2009ம் ஆண்டு மெக்ஸிகோவின் குடலுப் என்ற கடல் பகுதியில் மிகப் பெரிய வெள்ளை சுறாக்களுக்கு இணையாக கடற்கன்னி வேடத்தில் கடலில் சில நிமிடம் இருந்து திகில் சாதனையும் படைத்துள்ளார் பிரேசர். அந்த சுறாக்கள் 14 அடி உயரம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+