செத்தது யாரு, ராமசாமியா, குப்புசாமியா... ஆயிரம் ரூபாய் பெட்!
லக்னோ: பேஸ்புக், பீட்சா காலம் போய் இப்போது சூதாட்ட காலம் வந்து விட்டது. எதற்கெடுத்தாலும் பெட்தான்.. கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, வேறு எதுவாக இருந்தாலும் சரி. அந்த வகையில் உ.பி.மாநிலம் வாரணாசியில் செத்த பிணங்களை வைத்து பெட் கட்டி பிரளயம் ஏற்படுத்தி வருகிறார்கள்.
கேட்கவே கொஞ்சம் பீதியாக இருக்கிறதல்லவா, உண்மைதான். சுடுகாட்டையும் விடவில்லை இந்த சூதாட்டக்காரர்கள்.
செத்தவர்களை வைத்து விதம் விதமாக டிசைன் டிசைனாக பெட் கட்டி கல்லாக் கட்டி வருகிறார்களாம்.
அதைப் பற்றி அறிய வாங்க சுடுகாட்டுக்கு போய்ட்டு வரலாம்...

மணிகர்னிகா சுடுகாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது
வாரணாசியில் உள்ள பிரபலமான சுடுகாடுதான் இந்த மணிகர்னிகா சுடுகாடு. எப்பவுமே பிசியாக உள்ள சுடுகாடாம் இது. எப்பப் பார்த்தாலும் யாராவது எரிந்து கொண்டிருப்பார்கள் - அதாவது பிணங்கள் எரிந்தவண்ணம் இருக்குமாம்.

அதிகாலையில் சுப வேளையில்.. சூதாட்டம்
இந்த சுடுகாட்டில்தான் சூதாட்டக்காரர்களும் குவிகிறார்கள். அதுவும் அதிகாலையில்.

பாடி வருது.. பெட்டை ஆரம்பி
அங்கு தகனத்திற்காக கொண்டு வரப்படும் பிணங்கள் குறித்து அறிந்ததும் பெட்டை ஆரம்பிக்கிறார்கள்.

இப்ப சொல்லு ராமசாமியா.. ராமாயியா...
கொண்டு வரப்படும் பிணம் ஆணா, பெண்ணா என்று ஒரு பெட். பிணத்தை எந்த திசையிலிருந்து கொண்டுவருகிறார்கள் என்று இன்னொரு பெட். பிணத்தை எந்த வண்டியில் வைத்துக் கொண்டு வருகிறார்கள் என்று ஒரு பெட். எந்தக் கட்டையை வைத்து பிணத்தை எரிக்கப் போகிறார்கள் என்றும் ஒரு பெட்.

காலங்கார்த்தாலே.. ஒருவேலை இல்லாமே
அதிகாலை 4 மணிக்கெல்லாம் பெட் ஆரம்பித்து விடுமாம். அடுத்து எந்தப் பிணம் வரப் போகிறது என்று ஆரம்பித்து இந்த பெட் போகுமாம்.

குறைந்தது ரூ.1000
குறைந்தது ரூ. 1000க்கு பெட் வைக்கிறார்கள். அதிகபட்சம் ஒரு ஆள் ஒரு நாளைக்கு ரூ. 6000 முதல் 10,000 வரை சம்பாதிக்கிறார்களாம் இந்த சூதாட்டம் மூலம்.

போலீஸாரும் உடந்தை
சில நேரங்களில் விஐபிக்கள் யாராவது மண்டையைப் போட்டு விட்டால் போலீஸாரும் இந்த சூதாட்டக்காரர்களுக்கு உதவுவார்களாம். அதாவது செத்த விஐபி குறித்த முக்கியத் தகவல்களை தங்களுக்கு வேண்டப்பட்ட புக்கிகளுக்கு லீக் செய்து அதை வைத்து பெட்டில் ஈடுபடுத்தி அவர்களும் கமிஷன் வாங்கிக் கொள்வார்களாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications