பாலியல் குற்றவாளிகள் விவரத்தை வெப்சைட்டில் வெளியிடும் ஹிமாச்சல் போலீசார்
Subscribe to Oneindia Tamil
சிம்லா: ஹிமாச்சலப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோரின் தகவல்களை குறித்த முறையான, அதிகாரப்பூர்வமான இணையதள வசதியை தொடங்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளவர்களின் பெயர்கள் இந்த வெப்சைட்டில் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து மக்களின் பார்வையில் படுமாறு சேமித்து வைக்கப்படும் என இன்ஸ்பெக்டர் சஞ்சய் குண்டு தெரிவித்துள்ளார்.
இது நேற்று, டிஜிபி பி.கமல் குமார் தலைமையிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாம். மேலும் அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் பாலினம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கவும் அக்கூட்டத்தில் வைத்து முடிவெடுத்துள்ளார்களாம்.
இதன் மூலம் இந்தியாவிலேயே பாலியல் வன் கொடுமைகளுக்கு எதிரான வழக்குகளில் சரியான நடைமுறைகளை பின்பற்றும் முன்மாதிரி மாநிலமாக ஹிமாச்சல் விளங்கும் என சஞ்சய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications