கூட்டணிக்கு வாங்கன்னு யாரும் பாமகவிடம் கேட்கலையே... ஸ்டாலின்

தென்சென்னை மாவட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஸ்டாலின்.
அப்போது ஒரு செய்தியாளர், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை பார்க்க மருத்துவமனைக்குச் சென்றது குறித்து கேட்டபோது, டாக்டர் ராமதாசை பார்க்க செல்லவில்லை. சிகிச்சை பெறும் துறைமுருகனை பார்க்க சென்றேன். அவரது அறைக்கு எதிர் அறையில் டாக்டர் ராமதாஸ் குடும்பத்தினர் இருந்தனர். அவர்களிடம் நலம் விசாரித்தேன் என்றார்.
திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறுகிறாரே என்ற கேள்விக்கு, எந்த திராவிட கட்சி இவர்களிடம் கூட்டணி வேண்டும் என்று கேட்டார்கள்? என்று திருப்பிக் கேட்டார் ஸ்டாலின்.
ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க. போட்டியிடுமா என்ற இன்னொரு கேள்விக்கு அவர் பதிலளித்தபோது, அதுபற்றி கலைஞர்தான் முடிவெடுத்து அறிவிப்பார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications