விருந்தை சாப்பிட்டு விட்டு மரணத்தை பரிசாக அளித்த தலிபான்கள்: 7 போலீசார் பலி
காந்தகார்: போலீசார் வாங்கித் தந்த உணவை வயிறாற சாப்பிட்டு விட்டு, அவர்களையே தங்கள் துப்பாக்கிகளுக்கு விருந்தாகி விட்டு தப்பிச் சென்றுள்ளனர் இரண்டு தாலிபான் தீவிரவாதிகள். இச்சம்பவத்தில் 7 போலீசார் கொல்லப்பட்டனர்.
ஆட்சி மாற்றம் வேண்டி தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ‘அரபு வசந்தம்' என்ற பெயரில் கடந்த மாதம் அதிரடித் தாக்குதலை ஆரம்பித்த இவர்களின் தற்போதைய முக்கிய குறிக்கோள் ஆப்கன் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரை கொல்வது தான்.
இந்நிலையில், நேற்று இரவு காந்தகார் மாகாணத்தில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடிக்கு வந்த இரண்டு நபர்களுக்கு அங்கேயே தங்க அனுமதியும் அளித்து, இரவு உணவும் வாங்கிக் கொடுத்து உபசரித்துள்ளனர் பணியில் இருந்த போலீசார். ஆனால், சாப்பிட்டு முடிந்த கையோடு, அந்த நபர்கள் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக போலீசாரை நோக்கி சுட்டனர்.
இந்த திடீர் தாக்குதலில் 7 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிகள் போலீஸ் ஜீப்பிலேயே, சோதனைச்சாவடியில் இருந்த ஆயுதங்களை அள்ளி போட்டுக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக காவல் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "தாக்குதல் நடத்திய 2 பேரும் இதற்கு முன்னர் காவல்துறையில் பணியாற்றியவர்கள். ஆனால் வேலையை விட்டு சென்றுவிட்டனர். அதன்பின்னர் மீண்டும் போலீசில் சேர விரும்புவதாக கூறியுள்ளனர். ஆனால் விருந்து சாப்பிட்டதும் போலீசாரையே கொன்றுவிட்டனர்" என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications