சசிகலா மருமகன் நடிகர் பாஸ் என்கிற பாஸ்கரன் கைது... காரணத்தை இன்னும் சொல்லாத போலீஸ்!!

Subscribe to Oneindia Tamil

TTV Baskaran
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மருமகனும் பாஸ் என்ற பெயரில் நடிகராக புது அவதாரம் எடுத்துள்ளவருமான டி.டி.வி.பாஸ்கரனை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.

ஆனால் என்ன காரணத்துக்காக கைது என்ற விவரத்தை பாஸ்கரனிடம் கூட சொல்லவில்லையாம் போலீஸ்!

ஜெயலலிதா முதல் முறை முதல்வராக இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட ஜெஜெ டிவியின் பொறுப்பாளராக இருந்தவர் இந்த பாஸ்கரன்.

ஜெஜெ டிவி மூடப்பட்ட பிறகு, என்ன ஆனார் என்றே தெரியாமல் இருந்தார்.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து திடீரென ஒரு நாள் தான் ஹீரோவாக நடிக்கப் போவதாகவும், படத்தின் பெயர் தலைவன் என்றும் அறிவித்தார் பாஸ்கரன். பெயரையும் பாஸ் என்று மாற்றிக் கொண்டார்.

கடந்த இரண்டாண்டுகளாக உருவாகி வந்த இந்தப் படத்தின் இசை வெளியீடு சமீபத்தில்தான் சென்னையில் நடந்தது.

இந்த நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இன்று காலையில் கைது செய்தனர்.

ஆனால் எதற்காக பாஸ்கரன் கைது செய்யப்பட்டார் என்ற விவரத்தை இதுவரை காவல் துறை வெளியிடவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+