மியான்மரில் முஸ்லிம்களுக்கும் கட்டாய குடும்ப கட்டுப்பாடு
யன்கன்: முஸ்லிம் தம்பதியர் இரு குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடு மியான்மரில் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புக்குரல்கள் எழும்பியுள்ளன.
மனித உரிமைகளுக்கு எதிரானது இந்த விதி என்று மியன்மார் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சாங் சூய்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மியான்மரின் மேற்கு பகுதியில் பங்களாதேஷ எல்லையில் ராக்கின் மாகாணம், ரோகியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். கடந்த சில ஆண்டுகளாக, இப்பகுதிகளில் முஸ்லிம்களுக்கும், பௌத்த மதத்தினருக்கும் நடந்து வரும் வன்முறைகளில், இதுவரை நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். கலவரத்தில் மட்டும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் முஸ்லிம்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
கலவரம் குறித்து அரசு அமைத்த குழு விசாரணை நடத்தி தாக்கல் செய்ய அறிக்கையில், முஸ்லிம்களின் மக்கள் தொகை பெருக்கமே மதக் கலவரம் ஏற்பட காரணம். மேலும், பௌத்த மதத்தினரைவிட முஸ்லிம்களின் மக்கள் தொகை 10 மடங்கு அதிகம் இருப்பதால் தான் இந்த கலவரம் உருவானது தெரிவித்தது.
இந்தக் குழுவின் பரிந்துரையை ஏற்ற அந்நாட்டு அரசு முஸ்லிம்களுக்கு உடனடி குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. எனவே, மியான்மரில் ராகின் மாகாண முஸ்லிம்கள் குடும்பத்துக்கு தலா இரண்டு குழந்தைகள் பெற மட்டுமே அரசு அனுமதி வழங்கியுள்ளது. முஸ்லிம்களின் பலதார திருமணத்துக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
அரசின் இந்த அதிரடி திட்டத்துக்கு மியன்மார் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சாங் சூகி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங் கூறியுள்ளதாவது, ‘முஸ்லிம் தம்பதியர் இரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டு மனித உரிமைகளுக்கு எதிரானது, பாரபட்சமானது.
மியான்மரின் நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை இல்லை. நிர்வாகத்தில் உள்ளவர்களின் தலையீடு அதிகரித்து வருகிறது. நீதித்துறை நம்பகத்தன்மை பெற சுதந்திரமாக செயல்பட வேண்டும். உலக அளவில் மியன்மாருக்கு, அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய ஒரு பொது அடையாளத்தை உருவாக்க வேண்டும். பௌத்த மதத்தினர், கிறிஸ்துவர்கள், இந்துக்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் தேசிய அடையாளத்தில் பங்குவகிக்க வேண்டும்.
அனைத்து விதமான பாகுபாடுகளையும் நாம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இரு இனங்களுக்கிடையே நடக்கும் வன்முறையை நிறுத்த வேண்டும். வன்முறை நடைபெற காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications