சாப்பிட வாங்க...சினிமாவை விட பணம் கொழிக்கிறதாம் ஹோட்டல் பிசினஸில்!!!
மும்பை: சினிமாத் துறையை விட இந்தியாவில் மிகப் பெரிய துறையாக ஹோட்டல் துறை விளங்குகிறதாம்.அதாவது வருடத்திற்கு கிட்டத்தட்ட 48 பில்லியன் டாலர் அளவுக்கு ஹோட்டல் துறையில் புழக்கம் உள்ளதாம்.
இந்தியாவில் மிகப் பெரிய அளவில் வருமானம் ஈட்டும் துறையாக சினிமாவைத்தான் பலரும் கருதுகிறார்கள். ஆனால் அதைத் தூக்கிச் சாப்பிடுவதாக உள்ளது ஹோட்டல் துறை.
சினிமாத் துறை மூலம் வருடத்திற்கு 2 பில்லியன் டாலர் அளவுக்கு பணம் புரளுகிறது என்றால் ஹோட்டல் துறையில் 48 பில்லியன் டாலராக அது உள்ளது.

மிகப்பெரிய லட்டாம்...
இந்தியாவின் தொலைத் தொடர்புத்துறையை விட மிகப் பெரிய துறையாகவும் ஹோட்டல் உள்ளது. இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் நிறையப் பேர் இருந்தாலும் கூட உணவுப் பொருள் விற்பனை படு சூடாகவே உள்ளது என்பதையே இது காட்டுகிறது.

ஹோட்டலின் ‘விஸ்வரூபம்’....
ஹோட்டலுக்குப் போய் சாப்பிடுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே போகிறதாம். இவர்களால்தான் ஹோட்டல் துறையானது மிகவும் பெரிய துறையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது என்று தேசிய ஹோட்டல் சங்கத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

சுவையைத் தேடி...
இந்தியாவின் நகர்ப்புற மக்களின் வருமானம் முன்பை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. வாழ்க்கை முறை மாறியுள்ளது. உணவுப் பழக்க வழக்கங்கள் மாறி விட்டன. செலவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டன. சுவையைத் தேடி மக்கள் வெளியே வரத் தொடங்கி விட்டனர். இதுவே இந்தத் துறையின் விஸ்வரூப வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாம்.

பாஸ்ட் புட்...
பாஸ்ட் புட் துறையில் மட்டும் 70 சதவீத வளர்ச்சி காணப்படுகிறதாம். பப்புகள், பார்கள், கிளப்கள், லவுஞ்சுகளின் பங்கு 12 சதவீதமாகும்.

அவுட்டிங்...
இன்றைய மக்களுக்கு ஹோட்டல் சாப்பாடு என்பது நல்லதொரு பொழுதுபோக்கு அம்சமாகவும் மாறியுள்ளதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.

வெளிநாட்டு உணவகங்கள் வருகை...
இந்தியாவில் ஹோட்டல் மற்றும் உணவுப் பொருள் துறை நல்ல வளர்ச்சியைக் கண்டு வருவதால் பல ஹோட்டல்கள் மேலும் பல கிளைகளைத் திறக்க ஆயத்தமாகி வருகின்றனர். அதேபோல ஐரோப்பிய, அமெரிக்க ஹோட்டல் நிறுவனங்கள் இந்தியாவுக்குள் கால் பரப்ப காத்துள்ளன. லண்டனின் பிரபலமான பிங் பாங் விரைவில் இந்தியாவுக்கு வருகிறது. அதாவது அடுத்த மாதம் இது மும்பையில் கிளையைத் தொடங்குகிறது. அதேபோல நோபு, கார்லுக்காய்ஸ் போன்றவையும் இந்தியாவுக்கு வருகின்றன. ஆனால் இத்துறையில் சீனா ஏற்கனவே முன்னணியில் உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications