இந்தியாவில் ஆதார் அட்டை பெற்ற நாய்.. சேர்... மரம்...!
பெங்களூர்: நாய், சேர், மரம் போன்றவற்றின் புகைப்படங்கள் ஆதார் அட்டையில் குடிமக்களின் புகைப்படத்திற்கு பதிலாக பதிவாகி பரபரப்பை கிளப்பியுள்ளன.
ஆதார் கார்டு தயாரிக்கும் பணியில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக சில கார்டுகளில் சம்பந்தப்பட்டவரின் புகைப்படத்திற்குப் பதிலாக சேர், மரம் போன்றவை பதிவாகியுள்ளன. காமெடியாக சில கார்டுகளில் நாய் போன்ற விலங்குகளின் புகைப்படங்கள் உள்ளனவாம்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகார்களிடம் விளக்கம் கேட்கப்பட்ட போது, இது தங்களின் தவறல்ல. ஆனால் எங்கோ தவறு நடந்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘ சில புகைப்படங்களில் வெறும் சேர் மட்டும் இருக்கும் மாதிரியானவை தகவல் சேகரித்தவர்களின் அஜாக்கிரதையால் உண்டானவை. நாங்கள் புகைப்படத்துடன் விரல் ரேகையையும் சரி பார்த்தே கார்டுகள் வழங்க உள்ளோம். தெளிவாக இல்லாத காரணத்தால் கூட இந்த தவறுகள் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் உள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட அதிகார்களை நேரில் அனுப்பி தவறுகளை சரி செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.
யுஐடிஎஐ அதிகாரி அசோக் தல்வாய் இதுகுறித்து கூறியதாவது, ‘ சில நேரங்களில் தகவல் சேகரிக்கப் போனவர்கள், குடிமக்களிடம் எங்கே கைரேகை வைக்க வேண்டும் என செய்து காட்டும் போது, தவறுதலாக அங்கே அவர்களது கைரேகை பதிந்து விடுகிறது' எனக் கூறியுள்ளார்.
மேலும், ‘நாங்கள் நான்கு வழிமுறைகளில் நம்பகத்தன்மையை நிரூபிக்க செய்துள்ளோம். ஆனால், அதையும் தாண்டி சில நேரங்களில் இவ்வாறு தவறு நடை பெற்று விடுகிறது' என்றார்.
ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விண்ணப்பித்தோருக்கு விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications