ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி!
டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சு வாயு வெளியேறியதற்கான அறிவியல் ஆதாரம் இல்லாததால் அந்த ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடுமாறு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மார்ச் 29-ந்தேதி ஆணை பிறப்பித்தது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இந்த ஆணையை ரத்து செய்யக்கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இதன் மீதான விசாரணை டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வந்தது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாதிட்டார்.
இருப்பினும் தூத்துக்குடி பொதுமக்கள் பாதிக்கப்பட்டது ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவினாலா? அல்லது தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இருக்கும் பிற தொழிற்சாலையின் நச்சு வாயுவாலா? என்ற கேள்வியை பசுமை தீர்ப்பாயம் எழுப்பியிருந்தது. இதற்கு உறுதியான பதிலை தமிழக அரசு அளிக்கவில்லை. இதனால் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. அத்துடன் ஆலையைத் தொடர்ந்து கண்காணிக்க 5 நபர் கண்காணிப்புக் குழுவையும் தீர்ப்பாயம் அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications