500-க்கு 499 மதிப்பெண் பெற்றும் தமிழ் படிக்காததால் முதலிடத்தை இழந்த ரச்சனா!!
சென்னை: 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்றாலும், தமிழை பாடமாகப் படிக்காததால் ரச்சனா என்ற மாணவி முதலிடத்தை இழந்தார்.
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 498 மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இவர்களில் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த அனுஷா, தமிழில் 99 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவரைப் போன்றே தமிழ், ஆங்கிலத்தில் 99-ம், மற்ற பாடங்களில் நூற்றுக்கு நூறும் எடுத்த எட்டு மாணவிகள் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழை தவிர்த்துவிட்டு, வேறு மொழிகளை மொழிப்பாடமாக எடுத்துப் படித்த மாணவர்களில் இருவர் முதலிடம் பெற்றுள்ளனர்.
இத்தனைக்கும் இவர்கள் மாநில அளவில் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்ட 9 பேரை விட ஒரு மதிப்பெண் கூடுதலாகப் பெற்றவர்கள்.
புதுவையைச் சேர்ந்த ஹம்சிகா, பொன்னேரி வேலம்மாள் பள்ளியைச் சேர்ந்த ரச்சனா ஆகிய மாணவிகள் 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ரச்சனா சமஸ்கிருத்தை பாடமாக எடுத்துப் படித்தவர். அதில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். ஹம்சிகா ப்ரெஞ்சை மொழிப்பாடமாகப் படித்து 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
ஆனால் தமிழை எடுத்துப் படிக்காததால் அவர்களால் முதலிட அந்தஸ்தைப் பெற முடியவில்லை.
எஸ்எஸ்எல்சியில் தமிழைப் பாடமாகப் படித்தால் மட்டுமே மாநில அளவில் முதலிட அந்தஸ்தைப் பெறும் போட்டியில் இடம்பெற முடியும். மாநில அரசின் வேலைவாய்ப்புகளையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பழைய குற்றாலம் மாணவி மாநிலத்தில் 2வது இடம்
நெல்லை மாவட்டம் பழைய குற்றாலாம் ஹில்டன் பள்ளியில் படித்த மாணவி ஸ்டெர்லின் பொன் ஜெபா மாநில அளவில் 2வது இடத்தையும், நெல்லை மாவட்ட அளவில் 2வது இடத்தையும் பிடித்துள்ளார்.
இவர் பெற்ற மதிப்பெண் விவரம்-
தமிழ் -98, ஆங்கிலம் -99, கணிதம்-100, சமுக அறிவியல்-100, அறிவியல் -100, மொத்த மதிப்பெண் : 497
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications