அண்ணாவின் செயலாளர் அமெரிக்காவில் மரணம்... கருணாநிதி இரங்கல்
சென்னை: மறைந்த பேரறிஞர் அண்ணாவின் செயலாளர் சொக்கலிங்கம் ஐ.ஏ.எஸ். அமெரிக்காவில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பேரறிஞர் அண்ணா 1967 ம் ஆண்டு தமிழகத்தில் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற போது, முதல்வரின் தனிச் செயலாளராக யாரை நியமிப்பது என்ற பிரச்சினை எழுந்தது. அப்போது, தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்டவர் தான் சொக்கலிங்கம், ஐ.ஏ.எஸ்.
அதன் பின்பு, தமிழக அரசின் தலைமைச் செயலாளராகவும் பொறுப்பேற்று திறம்பட பணியாற்றினார். வாழ்நாள் முழுதும் சுயமரியாதை குணத்தோடும், இன உணர்வோடும் வாழ்ந்தவர்.
ஓய்வு பெற்ற பிறகு, அமெரிக்காவில் பணியாற்றிய தனது மகன்களுடன் சென்று வாழ்ந்து வந்தார். அவர் தனது 90 வது வயதில் அங்கேயே மறைந்து விட்டார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
சொக்கலிங்கம் மறைவால் வருந்துகின்ற அவருடைய துணைவியார், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications