கேரளாவில் தொடங்கியது பருவ மழை.. செங்கோட்டை, தென்காசி, குற்றாலத்திலும் 'ஜில் ஜில்' மழை
செங்கோட்டை: தென் மேற்குப் பருவ மழை ஜூன் 2ம் தேதி வரலாம் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகலுக்கு மேல் கேரளாவில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் தென் மேற்குப் பருவ மழை முன்கூட்டியே தொடங்கி விட்டதாக கருதப்படுகிறது.
கேரளத்தையொட்டியுள்ள தமிழகப் பகுதிகளான தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் உள்ளிட்ட நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக ஜூன் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போதைய நிலையைப் பார்த்தால் மழை முன்கூட்டியே தொடங்கி விட்டதாக தெரிகிறது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
கேரளாவில்தான் தென் மேற்குப் பருவ மழை முதலில் தொடங்கும். பின்னர் படிப்படியாக இது நாடு முழுவதும் பரவும். தமிழகத்தைப் பொறுத்தவரை தென் மேற்குப் பருவ மழையால் நமக்கு மழை குறைவாகவே கிடைக்கும்.
ஆனால் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இந்த மழைதான் மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். அதாவது காவிரி உற்பத்தியாகும் பகுதிகளில் மிக நல்ல மழை பெய்யும். கேரளப் பகுதிகளிலும் மழை பெய்யும். இதன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள அணைகள் நிரம்பி நமக்குத் தண்ணீர் கிடைக்க வழி ஏற்படும்.
எனவே இந்த மழை சிறப்பாக இருந்தால் அது காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்ச அளிக்கும் செய்தியாக அமையும்.
தென் மேற்குப் பருவ மழை செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். வழக்கமாக ஜூன் 1ம் தேதி மழை தொடங்க வேண்டும். ஆனால் இடையில் வங்கக்கடலில் வந்த மகாசேன் புயலால் ஈரப்பதத்தை அது உறிஞ்சிக் கொண்டு போய் விட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications