தெலுங்கான ராஷ்ட்ரிய சமிதிக்கு தாவும் கேசவ ராவ், 2 காங்கிரஸ் எம்.பி.க்கள்
ஹைதராபாத்: ஆந்திர பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கேசவ ராவ் மற்றும் 2 எம்.பி.க்கள் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் சேரப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கேசவ ராவ் மற்றும் 2 லோக்சபா உறுப்பினர்களான கட்டம் விவேகானந்தா, டாக்டர் மன்டா ஜகன்னாத் ஆகியோர் தெலுங்கான ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் சேர்ந்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
தனி தெலுங்கானா மாநிலம் குறித்து மத்திய அரசு ஒரு முடிவைத் தெரிவிக்காமல் உள்ளதை கண்டித்தும், மாலைக்குள்(நேற்று) இதற்கு ஒரு நல்ல தீர்வு அளிக்குமாறும் கோரி தான் அவர்கள் காங்கிரஸை விட்டு விலகப் போவதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் நேற்று மதியம் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவை சந்தித்து பேசினர்.
முன்னதாக அவர்களுடன் சேர்ந்து காங்கிரஸில் இருந்து விலகுவதாக இருந்த லோக்சபா எம்.பி. ராஜைய்யா மீண்டும் வாரங்கால் தொகுதியில் போட்டியிட தனக்கு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி உறுதி அளிக்காததால் பின்வாங்கிவிட்டார்.
நேற்று மாலைக்குள் காங்கிரஸ் நல்ல முடிவை கூறவில்லை என்றால் கட்சியை விட்டு விலகப் போவதாக அந்த 3 பேரும் தெரிவித்திருந்தனர். காங்கிரஸும் பதில் அளித்ததாகத் தெரியவில்லை, அவர்களும் கட்சியை விட்டு வெளியேறியதாகவும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications