இந்தியாவை இந்து நாடாக பிரகடனப்படுத்த வலியுறுத்துவோம்- அர்ஜூன் சம்பத் !
காரைக்குடி: ஜூன் 6 ம் தேதி முதல் 10 வரை, கோவாவில் இந்து ஜன ஜாக்கிரதி சமிதி சார்பில், அனைத்து இந்து அமைப்புகள் மாநாடு நடக்கிறது. இந்தியாவை இந்து நாடாக பிரகடனப்படுத்த வலியுறுத்துவோம் என இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
இது குறித்து காரைக்குடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது :-
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் சுவாமி தரினம் செய்ய பணம் கொடுத்து தரிசனம் செய்ய வேண்டி உள்ளது. இந்த நிலையை மாற்றி, பணம் இன்றி சுவாமி தரிசனம் செய்ய அரசு உரிய நவடிக்கையை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் 30 ஆயிரம் அறநிலையத்துறை கோயில்களில் அறங்காவலர் குழு நியமிக்கப்படவில்லை. கிறிஸ்தவர், முஸ்லீம்களுக்கு வாரியம் உள்ளது போன்று, இந்துக்களுக்கு அறவோர் வாரியம் அமைக்க வேண்டும்.
இந்துக்களின் புனித இடமான கைலாயத்திற்கு தமிழகத்தில் இருந்து பல ஆயிரம் பேர் செல்கின்றனர். இவர்களை ஊக்குவிக்கும் வகையில் கைலாயம் செல்வோருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து. ஆனால், கடந்த இரண்டு ஆண்டாக கைலாயம் செல்வோருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 ஆயிரம் வழங்கப்படவில்லை.
குதிரை ரேஸ், சீட்டாட்டம், சேவல் சண்டை, ஆட்டு சண்டை சூதாட்டம் என்பதால் அவற்றிற்கு தடை உள்ளது. கிரிக்கெட்டும் சூதாட்டமாகி விட்டதால், அதை தடை செய்ய வேண்டும்.
வரும் பாராளுமன்ற தேர்தலில், அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு, தமிழகம் பாடம் புகட்ட வேண்டும். அப்படி பாடம் புகட்ட வேண்டும் என்றால், தமிழகத்தில், தே.மு.தி.க., பா.ஜ., பா.ம.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி அமைக்க வேண்டும்.
ஜூன் 5 ம் தேதி முதல் 10 வரை, கோவாவில் இந்து ஜன ஜாக்கிரதி சமிதி சார்பில், அனைத்து இந்து அமைப்புகள் மாநாடு நடக்கிறது. இந்தியாவை இந்து நாடாக பிரகடனப்படுத்த வலியுறுத்தப்படும்' என தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications