15ம் தேதிக்குள் மத்திய அமைச்சரவை மாற்றம்: இது தான் கடைசி மாற்றம்?

மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில்,
உணவு பாதுகாப்பு மசோதா, தெலுங்கானா விவகாரம் குறித்து கட்சி கவனம் செலுத்தி வருகிறது. வரும் 15ம் தேதிக்கு முன்பு மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படும்.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் லோக்சபா தேர்தலுக்கு முன்பு நடத்தப்படும் கடைசி அமைச்சரவை மாற்றம் இதுவாகத் தான் இருக்கும். சில அமைச்சர்களுக்கு கட்சி பணி அளிக்கப்படும். இது குறித்து பிரதமரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஆலோசனை நடத்தினர் என்றார்.
கடந்த சில மாதங்களாக காங்கிரஸுக்கு பிரச்சனையாக இருந்து வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திமுக வாபஸ் பெற்றது. இதையடுத்து அக்கட்சி அமைச்சர்கள் 5 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். மத்திய ரயில்வே அமைச்சர் பன்சால் லஞ்ச விவகாரம் தொடர்பாக தனது பதவியை கடந்த மாதம் ராஜினாமாசெய்தார். மேலும் நிலக்கரி ஊழல் விவகாரம் தொடர்பாக அஷ்வனி குமார் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ரயில்வே துறை சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சி.பி. ஜோஷியிடமும், சட்டத் துறை தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபலிடமும் ஒப்படைக்கப்பட்டது.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications