ஆர்டிஐ-ல் விண்ணப்பித்த கற்பழிப்பு வழக்கு தம்பதியின் குட்டு உடைந்து ஆயுள்
டெல்லி: டெல்லியில் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தம்பதி தகவல் அறியும் சட்டத்தில் விவரம் கேட்டு விண்ணப்பிக்க அவர்களின் சிறை தண்டனை ஆயுள் தண்டனையாக மாறியுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டில் டெல்லியில் மைனர் பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக சேத் என்பவருக்கும், அந்த குற்றத்திற்கு துணை போன அவரது மனைவி உஷா ராணிக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அதே ஆண்டில் ஜூன் மாதம் வெளிவந்த செய்தித்தாளில் காஷ்மீர் கேட்டில் கையில் வாசிரோ பாய் என்று பச்சைக் குத்தப்பட்டிருந்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்று புகைப்படத்துடன் கூடிய செய்தி வந்திருந்தது. இதைப் பார்த்த சேத் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அந்த பெண்ணை பற்றிய விவரங்கள் கேட்டு விண்ணப்பித்தார்.
தன்னை தவறாக கற்பழிப்பு வழக்கில் கைது செய்ததாகவும், மைனர் பெண் தன்னுடைய சகோதரர்கள் 2 பேரும், வாசிரோ பாய் என்ற தனது தாயும் காணாமல் போனதற்கும் தன் மீது பழிபோட்டார் என்றும் சேத் அந்த விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தார். அவரது விண்ணப்பம் குறித்து விசாரணை நடத்தியபோது தெரிய வந்த தகவல் வருமாறு,
சேத் மற்றும் உஷா ராணி 2004ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி மைனர் பெண் அவரின் தாய் வாசிரோ, சகோதரர்கள் சில்லு, ஆஷூ ஆகியோரை பாஹர் கஞ்ச்சில் உள்ள தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு அவர்கள் வாசிரோ மற்றும் சிறுவர்களை கொன்றுள்ளனர். சேத் அந்த சிறுமியை கற்பழித்துவிட்டு விபச்சாரத்தில் தள்ளிவிட்டுவிட்டார்.
சிறுமிக்கு தனது குடும்பத்தார் கொல்லப்பட்டது தெரியாததால் தான் கற்பழிக்கப்பட்ட வழக்கில் அந்த தம்பதிக்கு எதிராக சாட்சி அளித்தார். இதையடுத்து கணவனுக்கும், மனவைிக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் 3 பேரை கொன்ற விவகாரம் தெரியவே அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications