பெரிய நகரம்... சின்னஞ்சிறு வீடுகள்: அமெரிக்காவில் பரவும் புதிய கலாச்சாரம்

அரண்மனை பொன்ற வீடுகளில் வாழ விரும்பிய காலம் போய், அடுக்குமாடி குடியிருப்புகள் வந்தன. தற்போது அதுவும் மலையேறத் தொடங்கிவிட்டதாம். இப்போதெல்லாம் மைக்ரோ குடியிருப்புகள் என்ற பெயரில் சிறிய அளவிலான அடுக்குமாடி வீடுகள் தான் அமெரிக்க மக்களின் முதல் சாய்ஸ்ஸாக இருக்கிறதாம்.
அதிலும் குறிப்பாக, மேற்படிப்பிற்காக செல்லும் மாணவர்கள், வேலை நிமித்தம் சென்றவர்கள் போன்றோரின் பொருளாதார வசதிக்கேற்ப இந்த மைக்ரோ குடியிருப்புகள் வடிவமைக்கப்படுகின்றன.
வெறும் 200 சதுர அடிக்குள்ளாகவே, குளியல் அறை, சமையல் அறை மற்றும் படுக்கை அறையுடன் இந்த மைக்ரோ குடியிருப்புகள் அமைந்துள்ளதே இதன் சிறப்பம்சமாகும். சமையல் அறையில் எலெக்ட்ரிக் அடுப்பு, ப்ரிட்ஜ் போன்ற வசதிகள் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பாகும். சில குடியிருப்புகளில் வாகனங்களை நிறுத்தும் வசதிகள் கூட அமைந்துள்ளதாக கூறுகின்றனர்.
அப்படி வாகன நிறுத்தம் இல்லாத மைக்ரோ குடியிருப்புவாசிகள், நகராட்சி நிர்வாகத்திடம் தெரு ஓரங்களில் நிறுத்துவற்கான அனுமதி அட்டைகளை பெற்று, தங்கள் வாகனங்களை தெரு ஓரங்களில் நிறுத்திக் கொள்கின்றனராம்.
குறிப்பாக மைக்ரோ குடியிறுப்புகள் நகரின் முக்கிய இடங்களில் அமைவதால், அதில் தங்கும் மக்களுக்கு மற்ற வசதிகள் எளிதாகக் கிடைக்கப் பெறுகிறதாம். சியாட்டில் போன்ற பெருநகரங்களில், பொதுவாக இத்தகைய குடியிருப்புகள் சுமார் 500 முதல் 1000 டாலருக்குள் வாடகைக்குக் கிடைக்கின்றனவாம்.
அசுர வேகத்தில் மக்கள்தொகை பெருகிவரும் காலக்கட்டத்தில், இத்தகைய மைக்ரோ குடியிருப்புகளால் மேலும் அதிகப்படியான பிரச்சினைகளே உருவாகும் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications