ஆஸ்திரேலியாவில் செட்டிலாகும் வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் நம்பர் ஒன், சீனாவுக்கு 2வது இடம்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் செட்டிலானவர்களில் அதிகாமானோர் இந்தியர்கள் என்று அந்நாட்டு ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய குடியுரிமைத் துறை அமைச்சர் பிரென்டன் ஓ கான்னர் 'ஆஸ்திரேலியாஸ் மைக்ரேஷன் டிரென்ட் 2011-2012' என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது,
2011-2012ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து வந்து ஆஸ்திரலேயாவில் நிரந்தரமாக குடியேறியவர்களின் எண்ணிக்கை 29,018 ஆகும். இது முந்தைய ஆண்டை வித 12.7 சதவீதம் அதிகம் ஆகும். வெளிநாடுகளில் இருந்து வந்து ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்களில் இந்தியர்கள் முதல் இடத்திலும், சீனர்கள் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
2011-2012ம் ஆண்டில் சீனாவில் இருந்து 25,509 பேர் ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ளனர். முந்தைய ஆண்டு இந்த எண்ணிக்கை 29, 546 ஆக இருந்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஓ கான்னர் கூறுகையில்,
ஆசியாவில் இருந்து தான் ஏராளமானோர் ஆஸ்திரேலியாவில் குடியேறுகின்றனர். ஆஸ்திரேலியாவில் வந்து குடியேறுபவர்களில் முதல் 10 இடங்களை ஆசிய நாடுகள் பிடித்துள்ளன. 1996ம் ஆண்டு முதல் 2011ம் ஆம்டு வரை ஆஸ்திரேலியாவில் வந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்து 6 மில்லியனைத் தொட்டுள்ளது. இது ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த மக்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.
2011-2012ம் ஆண்டில் பல வெளிநாட்டவர்கள் தற்காலிக விசாவில் இருக்கையிலேயே இங்கேயே செட்டிலாக அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். 2011-2012ம் ஆண்டில் மட்டும் 13,700க்கும் அதிகமான விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications