For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கஜினி ஸ்டைல் ’பச்சை என்கிற சிலிக்கான் பாஸ்வேர்ட் ஸ்டிக்கர்’: மோட்டோரோலா அறிமுகம்

Google Oneindia Tamil News

டோக்கியோ: பச்சை குத்துவது அழகிற்கு என்ற காலங்கள் மாறி, தற்போது, பாஸ்வேர்டை நினைவில் வைத்துக் கொள்ள நவீன ஸ்டிக்கர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது மோட்டரோலா கம்பெனி.

தமிழிலில் சூர்யாவும், ஹிந்தியில் அமீர்கானும் கலக்கிய ‘கஜினி' படத்தைப் பார்த்திருப்பீர்களே. அதில், மறதி நோயால் அவதிப்படும் ஹீரோ, உடல் முழுவதும் பச்சை குத்தி அலைவார்.

நிஜத்தில் நம்மில் பலரும் அப்படித்தான் ஞாபக மறதியால் அவதிப்படுகிறோம். செல்போனில் எல்லா எண்களையும் பதிவு செய்து கொள்வதால் பலருக்கு தன் நெருங்கிய சொந்தங்களின் எண்கள் கூட தெரிவதில்லை.

இதற்கு ஒரு தற்காலிக விடிவுகாலமாய், மோட்டோரோலா ஸ்டிக்கர் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

உங்களுக்காக தான் பாஸ்...

ரொம்ப ஈஸியான பாஸ்வேர்டை வைத்து தானாகவே ஹேக்கர்களின் வலையில் சிக்கிக் கொள்ளும் அப்பாவிகளுக்காகவே இப்படி ஒரு முயற்சியில் மோட்டோராலா ஒரு புது வகை சிலிக்கான் ஸ்டிக்கரை உருவாக்கி உள்ளது.

அப்படியே சாப்பிடலாம்...

இந்த சிலிக்கானை உடம்பில் பச்சை போல் ஒட்டி கொள்ளலாம் அல்லது சிறு குளிகை போல் முழுங்கியும் கொள்ளலாம்.

வாட்டர் புரூப் ஸ்டிக்கர்...

சிலிக்கானின் புண்ணியத்தில், உங்கள் கனிணி, பேங் லாக்கர்,வீடு, வாகனம் போன்ற அத்தனைக்கும் ஆட்டோமெட்டிகாக பாஸ்வோர்டை எடுத்து கொள்ளலாமாம். வாட்டர்புரூப் என்பது இதன் சிறப்பம்சம்.

இது டெம்ரவரி தான்...

தற்போதைய கண்டுபிடிப்பின் படி, இந்த சிலிக்கான் ஸ்டிக்கர் இரண்டு வாரத்திற்க்கும் - முழுங்கும் மேட்டர் ஒரு வாரத்திற்க்கும் தாங்குமாம்.

பெர்மணண்ட் ஸ்டிக்கர்...

விரைவில் பிறந்த குழந்தை உடம்பில் ஒட்டுவது போல் ஸ்டிக்கர் அறிமுகப் படுத்தப்பட உள்ளதாம். இதன்மூலம், வாழ் நாள் முழுவதும் அனைத்து பாஸ்வோர்ட்களை பதிவு செய்து கொள்ள முடியுமாம்.

நடமாடும் 'ஆல் இன் ஆல்' மெஷின்...

அது மட்டுமின்றி, இந்த ஸ்டிக்கர் மூலம் நேரம், ஈசிஜி, பிளட் பிர்ஷர் போன்ற அனைத்தையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இயலுமாம்.

English summary
Motorola thinks that humans are wasting a lot of energy & time in remembering & typing passwords. Motorola has a fix – using body tatto or an FDA approved pill which will allow authentication without you having to do anything extra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X