கோவாவில் தமிழ் எழுத்தாளரின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிப்பு... கொலை?
Subscribe to Oneindia Tamil
பனாஜி: தமிழ் எழுத்தாளர் ரவிக்குமார் என்பவரின் இறந்த உடல் கோவாவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெரியவில்லை.
கலன்கட் என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ரவிக்குமார் வசித்து வந்ததாக தெரிகிறது. சில நாட்களாக அவரைக் காணவில்லை. இந்தநிலையில் ரவிக்குமார் தங்கியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் கிளம்பியது. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது.
போலீஸார் விரைந்து வந்து வீட்டைத்திறந்து உள்ளே போய்ப் பார்த்தபோது ரவிக்குமார் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.
அவர் கொலை செய்யபப்பட்டாரா அல்லது தற்கொலையா என்பது குறித்துத் தெரியவில்லை. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications