தேமுதிகவிலிருந்து ஏகப்பட்ட பேர் திடீரென நீக்கம்- விஜயகாந்த் அதிரடி

விஜயகாந்தின் தேமுதிகவில் இருந்து ஒருபுறம் எம் எல் ஏ க்கள் விலகி அதிமுக பக்கம் ஓடிக்கொண்டு இருக்கும் சமயத்தில் அக்கட்சியில் பொறுப்புக்களில் உள்ள பலரையும் அவர் இன்று நீக்கியுள்ளார் .
திருவள்ளூர் நகர செயலாளர் சங்கர்,தேனீ ஒன்றிய செயலாளர் ஜெகநாதன்,அவினாசி ஒன்றிய துணை செயலாளர் ரவிக்குமார்,அவரது மனைவியும் ஒன்றிய கவுன்சிலருமான கவிதா,காங்கேயம் நகர செயலாளர் அபி புல்லா ,வேலூர் கந்திலி ஒன்றிய முன்னாள் அவை தலைவர் பழனி வேல்,பெரியகுளம் சுந்தர ராஜ்,உள்ளிட்டோரை கட்சியின் அடிப்படை பொறுப்புக்களில் இருந்து நீக்கியுள்ளதாகவும் அவர்களிடம் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏன் இவர்களையெல்லாம் கட்சிப் பொறுப்புகளிலிருந்து விஜயகாந்த் தூக்கினார் என்பது தெரியவில்லை. இவர்களில் எத்தனை பேர் அதிமுகவுக்கு ஓடிப் போகப் போகிறார்கள் என்பதும் யாருக்கும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications