ஓவர் செலவில் செட் போட்டு திருமணம்... 'பேஸ்புக்' சீன் பார்க்கருக்கு பெருத்த அபராதம்!
சான்பிரான்சிஸ்கோ: பெரும் பொருட்செலவில் சினிமா பாணியில் செட் போட்டு திருமணம் செய்த பேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான சீன் பார்க்கருக்கு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
சீன் பார்க்கருக்கு 2.5 மில்லியன் டாலர் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் வைத்து சினிமா பட பாணியில் பெரும் செட் போட்டு திருமணத்தை நடத்தினார் பார்க்கர். இதற்காக அதிகாரிகளிடம் உரிய முறையில் அனுமதியை அவர் பெறவில்லை. இதற்காகத்தான் தற்போது அபராதம் தீட்டி விட்டனராம்.
கலிபோர்னியா கடலோரப் பகுதியில் இந்த செட் போடப்பட்டிருந்தது. ஆனால் கடலோரப் பாதுகாப்பு கமிஷனிடம் இதற்காக அனுமதி பெறவில்லையாம் அவர். 33 வயதாகும் சீன் பார்க்கர் பேஸ்புக் நிறுவனத்தின்முன்னாள் தலைவர் ஆவார். கடந்த சனிக்கிழமையன்று இவருக்கும், பாடகியும், பாடலாசிரியையுமான அலெக்சாண்ட்ரா லெனாஸுக்கும் திருமணம் நடந்தது.
இதற்காக போடப்பட்ட செட்டில் காட்டேஜ், அரண்மனை கட்டடங்கள், நீர்வீழ்ச்சிகள், படிக்கட்டுகள், பெரிய நடன அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. படப்பிடிப்புக்காக அமைக்கப்படும் செட் போல இவை இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அபராதத்தை செலுத்த பார்க்கர் ஒப்புக் கொண்டு விட்டார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications