நீங்க தம் அடிக்கிற ஸ்டைலை பார்த்தா வேலை போய்ரும்... பாஸ்!
பாரீஸ்: புகை பிடிப்பவர்களின் சங்காத்தமே வேண்டாம் என்ற நிலைக்கு அமெரிக்க நிறுவனங்கள் போய்க் கொண்டிருக்கின்றனவாம். புகை பிடிப்பவர்களால் நிறுவனங்களுக்கு பெரும் வெட்டிச் செலவு ஏற்படுகிறதாம்.
டொபாக்கோ கன்ட்ரோல் என்ற பத்திரிக்கையில் இதுதொடர்பான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
புகை பிடிக்காத பழக்கம் கொண்ட ஊழியர்களை விட புகை பிடிக்கும் ஊழியர்களால் பெரும் செலவுகள் ஏற்படுவதாகவும் நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.

6000 டாலர் எக்ஸ்ட்ரா செலவு
புகை பிடிக்காத ஊழியர்களுடன் ஒப்பிடுகையில், புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட ஊழியர்களால் ஒரு நிறுவனத்துக்கு சராசரியாக ஆண்டுக்கு 6000 டாலர் கூடுதல் செலவு ஏற்படுகிறதாம்.

லொக்கு லொக்குன்னு இருமலு...கூடவே லீவும்
புகை பிடிக்கும் ஊழியர்களுக்கு அடிக்கடி உடம்பு கெட்டுப் போய் விடுகிறது. இருமல் தொல்லை வருகிறது. சுகவீனம் காரணமாக அடிக்கடி லீவு போடுகிறார்கள். உற்பத்தித் திறன் குறைந்து போய் விடுகிறது.

அடிக்கடி தம் அடி...
அடிக்கடி சீட்டை விட்டு எழுந்து போய் தம் அடிக்கப் போய் விடுவதால் வேலை பாதிக்கப்படுகிறது. வேலை நேரத்தி்ல வேலை செய்யாமல் கூடுதலாக உட்கார்ந்து வேலை செய்வதால் எக்ஸ்ட்ரா மின்சார பயன்பாடு காரணமாக செலவுகள் வந்து சேருகின்றன.

பென்ஷன் செலவு குறைவு
அதேசமயம், புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விட புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கான பென்ஷன்செலவு குறைகிறதாம்.. காரணம், இவர்கள் சீக்கிரமே செத்துப் போவதால்....

இன்சூரன்ஸ் கம்பெனிகளின் கெடுபிடி
புகை பிடிக்கும் ஊழியர்களுக்கான இன்சூரன்ஸ் பிரிமீயத்தை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பெருமளவில் உயர்த்தி விட்டனவாம். அதைக் கட்ட முடியாத நிறுவனங்களிடம், பேசாமல் புகை பிடிக்காத ஊழியர்களை மட்டுமே வேலைக்கு எடுங்கள் என்று நெருக்கடி தருகின்றனவாம் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்.

தம்ம நிறுத்து.. இல்லாட்டி வேலை போய்ரும் குமாரு
பல நிறுவனங்கள் இந்த தலைவலியே வேண்டாம் என்று தனது ஊழியர்கள் உடனடியாக புகை பிடிக்கும் பழக்கத்தை விட வேண்டும் என்று கண்டிஷனாக சொல்லி வருகின்றனவாம். இல்லாவிட்டால் டிஸ்மிஸ்தான் என்றும் அவை மிரட்டுகின்றனவாம்.
நம்ம ஊர்லயும் இந்த ரூலை அமல்படுத்தங்கப்பா... 'கார் பார்க்கிங்'கில் கப் கப் என்று தம் அடிப்போர் எண்ணிக்கை குறையும்!












Click it and Unblock the Notifications