நெல்லையில் மீண்டும் டெங்கு ... 8 மாதக் குழந்தை பலி
நெல்லை: நெல்லையில் மீண்டும் டெங்குக் காய்ச்சல் பரவ ஆரம்பித்துள்ளது. 8 மாதக் குழந்தையொன்று மேலப்பாளையம் பகுதியில் உயிரிழந்துள்ளது.
நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் முகமது நியாஸ், இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மூத்த மகன் வாஜித். இரண்டாவது மகள் ஜபினா.
குழந்தை ஜபினாவுக்கு கடந்த 20ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. குழந்தையை உடனடியாக நெல்லையில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 21ம் தேதி
குழந்தையின் உடல் நிலை மோசமடைந்தது. உடனே அங்கு உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார். அங்கு குழந்தையின் உடலில் ரத்த அணுக்கள் குறைந்தது.
அடுத்த மூன்று நாட்களில் குழநதையின் உடல் நிலை மோசமடைந்தது. இதனை தொடர்ந்து மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தொடர்ந்து 10 நாள் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அதிகாலை குழந்தை இறந்தது. இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், முதலில் குழந்தையை அழைத்து சென்ற மருத்துவமனையில் குழந்தையில் உடல் நிலை 3 தினங்களில் மோசமடைந்தது. இதையடுத்து மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்குள்ள டாக்டர்கள் டெங்கு பாதித்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டு அதற்கும் சிகிச்சை அளித்தனர். ஆயினும் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்து வி்ட்டது என்றனர்.
கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்தது. தற்போது தென்மேற்கு பருவமழை சாரலாக பெய்து வருவதால் தண்ணீர் தேங்கி கொசு புழுக்கள் அதிகரித்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் டெங்கு பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications