நம்ம கண்ணுல தக்காளிச்சட்னி வரவழைக்கும் கொலம்பியாவின் ‘தக்காளித் திருவிழா’
பொகோடா: நம்மூருல தக்காளி கிலோ 50ரூபாய்க்கு விக்குதுனு நினைச்சு நம்ம கண்ணுல தக்காளி சட்னி வருது. ஆனா, பாரின்ல தக்காளிய வச்சு திருவிழாவே கொண்டாடுறாங்களாம்.
உலகமெங்கும் பல வித்தியாசமான திருவிழாக்கள் கொண்டாடப் படுகின்றன. அவற்றில் ஒன்று தான் இந்த விசித்திரமான தக்காளிப் பண்டிகை.
கொலம்பியா நாட்டில் இடம்பெற்று வருகின்ற தக்காளித் திருவிழாதான் இது.
வயது வித்தியாசமின்றி, வேடிக்கையான கேளிக்கையான கொண்டாட்டமாக இந்தத் திருவிழா இங்கு பிரபலம் பெற்று உள்ளது.

ஜூன் மாதம் வந்தால்...
ஜூன் 2 ம் தேதி கொலம்பியா மக்கள் ‘தக்காளித் திருவிழா'வை கோலாகலமாகக் கொண்டாடியுள்ளார்கள்.

தக்காளிச் சாறு...
பொதுமக்கள் தக்காளிகளை நசுக்கி, பிழிந்து ரோட்டில் ஆறாக ஓட விட்டார்கள் தக்காளித் திருவிழாவில்...

ஒரே ஜாலிதான்...
தக்காளி ஆற்றில்... சாரி, சாற்றில் உருண்டு, பிரண்டு மக்கள் குதூகளித்தார்கள்.

தக்காளிக்கு மரியாதை...
வருடந்தோறும் அதிகப்படியாய் விளையும் தக்காளியினை பெருமைப் படுத்துவதற்காகவே இந்த தக்காளித் திருவிழாவை கொண்டாடுகிறார்களாம் இவர்கள்.

கரை புரண்டு ஓடும் உற்சாகம்...
சாலையெங்கும் இரத்த ஆறு போல் ஓடும் தக்காளிச் சாற்றைப் பார்த்ததும், இம்மக்களுக்கு உற்சாகம் கரை புரண்டு ஓட ஆரம்பித்து விடுமாம்.

ஒருவர் மீது ஒருவர்...
ஒருவர் மீது ஒருவர் தக்காளிச் சாறை வாரி பூசி, கட்டிப் புரண்டு கொண்டாடுகிறார்கள்.

சும்மா வெறுப்பேத்ததான்...
என்னமோ போங்க... இப்படி தக்காளிய காமிச்சு உங்க எல்லாரையும் வெறுப்பேத்தணும்னு எனக்கென்ன ஆசையாங்க... நாம ஒரு கிலோ தக்காளி வாங்க ஓராயிரம் தடவ யோசிக்கறோம், ஆனா, அங்க...?
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications