டெல்லியில் பயங்கரம்: வாஷிங் மெசினில் போட்டு குழந்தையைக் கொன்ற தாய் தானும் தற்கொலை
டெல்லி: டெல்லியில் குடும்ப தகராறு காரணமாக பெற்ற குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாயும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு டெல்லி பகுதியில் மண்டவாலி பகுதியை சேர்ந்தவர் தேவேந்திர யாதவ். இவரது மனைவி சரிதா(30 ). தேவேந்திர யாதவ். நேற்று காலையில் வேலைக்கு போய்விட்டு இரவில் வீடு திரும்பினார்.
கதவை பல முறை தட்டியுள்ளார். கதவை மனைவி திறக்கவில்லை என்பதால் டெல்லி போலீஸ் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சரிதா தூக்கில் தொங்கியபடி இறந்த நிலையில் கிடந்தார். வீட்டிற்குள் உள் தாழிட்டு தூக்குப் போட்டுக் கொண்டுள்ளார் சரிதா.
குழந்தைகளை தேடியபோது வாஷிங் மிஷனில் 6 வயது பெண் குழந்தை இறந்து கிடந்தது, வாளியில் உள்ள தண்ணீரில் 11 மாத ஆண் குழந்தையும் இறந்த நிலையில் கிடந்தன. ஆனால் இவரது அறையில் தற்கொலை கடிதம் எதுவும் இருக்கவில்லை. குழந்தைகளைக் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்த போது , செவ்வாய்கிழமை இரவு நேரத்தில் அதிக சப்தத்துடன் வாக்குவாதம் நடந்ததாக தெரிவித்தனர். கணவன் , மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த பெண் இந்த கொடூர முடிவை எடுத்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
வாஷிங்மிஷனில் மகளை போட்டு கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிழக்கு டெல்லி பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications