ஹை ஹீல்ஸுக்கு வாழ்க்கைப்பட்டா வாழ்நாளெல்லாம் வேதனைப்படணுமாம்!
லண்டன்: ஹை ஹீல்ஸ் அணிவதால் நிரந்தரமான காயம் ஏற்படக்கூடும் என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து மக்களிடம் ஹை ஹீல்ஸ் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள தி காலேஜ் ஆஃப் போடியாட்ரி இந்த ஆய்வை நடத்தியது. இதில் சரியான அளவு காலணிகளை அணியாமல் பாதி பெண்கள் பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்படுவதும், 43 சதவீதம் பேர் ஃபேஷன் என்ற பெயரில் ஹை ஹீல்ஸை அணிந்து வலியில் வாடுவதும் தெரிய வந்துள்ளது.
பொதுவாக ஹை ஹீல்ஸ் அணிந்தால் 1 மணிநேரம் 6 நிமிடம் 48 வினாடிகள் கழித்து கால் வலிக்க ஆரம்பித்துவடும். ஆனால் ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 20 சதவீதம் பேருக்கு 10 நிமிடத்திலேயே காலில் வலி ஏற்படுகிறதாம்.

தப்பான சைஸ் காலணி
தவறான அளவு காலணி அணிந்தால் ஆர்த்ரிடிஸ், ஸ்டெரஸ் பிராக்சர், நரம்பு பிரச்சனை ஏற்படும். இதனை சரிசெய்ய அறுவை சிகிச்சை அல்லது ஸ்டெராய்டு ஊசிகள் தேவைப்படும் என்று போடியாட்ரிஸ்ட் மைக் ஓ நீல் எச்சரித்துள்ளார்.

பார்க்க நல்லா இருக்குதுல
ஹை ஹீல்ஸ் தங்கள் கால்களுக்கு சரியான அளவில் இல்லாவிட்டாலும் பார்க்க அழகாக இருப்பதால் அதை அணிவதாக சில பெண்கள் தெரிவித்துள்ளனர்.

வலி தாங்க முடியவில்லை
ஹை ஹீல்ஸ் அணிவதால் கால் வலியைத் தாங்க முடியாமல் 28 சதவீதம் பெண்கள் இரவு நேர விடுதிகளில் வெறுங்காலில் நடனமாடுகிறார்களாம். பலர் ஹைல்ஸை கையில் வைத்துக் கொண்டு வெறுங் காலில் நடந்து செல்கிறார்களாம்.

6 இன்ச் ஹீல்ஸ்
18 முதல் 24 வயதுடைய 20 சதவீத பெண்கள் 6 இன்ச் ஹீல்ஸ் வைத்துள்ளனராம். பல பெண்கள் காலில் ஏற்படும் பிரச்சனைகளை கவனிப்பதில்லையாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications