For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த வருஷ மிஸ் வேர்ல்ட் போட்டியில் இனிமேல் பிகினி கிடையாதாம்லே!

Google Oneindia Tamil News

ஜகார்தா: இந்தோனேசியாவில் இந்த வருடம் நடைபெறவுள்ள மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டியில் பிகினி உடைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா இஸ்லாமிய நாடு என்பதால் இந்த முடிவை மிஸ் வேர்ல்ட் அமைப்பு எடுத்துள்ளது.

வருகிற செப்டம்பர் மாதம் இந்தோனேசியாவில் மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

137 அழகிகள்

137 அழகிகள்

இந்தோனேசிய மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டியில் மொத்தம் 137 அழகிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

பாலி தீவில்

பாலி தீவில்

இந்தோனேசியாவின் அழகிய பாலி தீவில்தான் மிஸ் வேர்ல்ட் போட்டி நடைபெறவுள்ளது.

அதுக்குப் பதில் இது....

அதுக்குப் பதில் இது....

மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியில் பிகினி உடைக்கு தனி மரியாதையே உண்டு. ஆனால் இந்த வருடம் போட்டி இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் நடப்பதால் அதை நிறுத்தி விட்டு பாரம்பரிய உடையை சேர்த்து விட்டனர்.

ஒருத்தரும் பிகினி அணிய மாட்டார்கள்

ஒருத்தரும் பிகினி அணிய மாட்டார்கள்

இதுகுறித்து மிஸ் வேர்ல்ட் அமைப்பின் தலைவியான ஜூலியா மார்லி கூறுகையில், போட்டியில் பங்கேற்கும் அழகிகள் யாரும் பிகினி அணிய மாட்டார்கள். நாங்கள் யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. நெறிமுறைகளுக்கு மதிப்பளிக்க விரும்புகிறோம். எனவேதான் இந்த முடிவு என்றார்.

காகாவுக்கு கிடைத்த 'ஆஹா' வரவேற்பால் பீதி!

காகாவுக்கு கிடைத்த 'ஆஹா' வரவேற்பால் பீதி!

இந்தோனேசியாவுக்கு கடந்த ஆண்டுவரவிருந்த பாப் பாடகி லேடி காகாவுக்கு இஸ்லாமிய அமைப்புகள் சில கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கவர்ச்சியான உடை அணியும் காகா வரக் கூடாது என்று அவை எதிர்த்தன. இதனால் காகா தனது நிகழ்ச்சியை ரத்து செய்தார்.

பியான்ஸுக்கும்.. புஸ்ஸி கேட்டுக்கும்

பியான்ஸுக்கும்.. புஸ்ஸி கேட்டுக்கும்

அதேபோல பியான்ஸுக்கும், புஸ்ஸி கேட் டால்ஸ் பாண்ட் குழுவுக்கும் கூட எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவர்கள் கவர்ச்சியை மறைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று.

ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பியாச்சு

ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பியாச்சு

ஏற்கனவே மிஸ் வேர்ல்ட் போட்டியை இந்தோனேசியாவில் நடத்த இஸ்லாமிய அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது நினைவிருக்கலாம். இதுதொடர்பாக உலமா கவுன்சிலும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து பூனம்

இந்தியாவிலிருந்து பூனம்

இந்தியாவிலிருந்து நவ்னீத் கெளர் தில்லான் மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியில் பங்கேற்கிறார். 20 வயதான நவ்னீத், வெல்வாரா.. பார்க்கலாம்.

English summary
Contestants at this year's Miss World beauty pageant will not wear bikinis in the parade in a bid to avoid causing offence in Muslim-majority Indonesia, organisers confirmed on Wednesday. The 137 women taking part in the September contest will swap bikinis for more conservative attire, such as traditional sarongs, for the beach fashion section. The contest is being held on the resort island of Bali, where foreign tourists flock in their millions and the beaches are packed with women sunbathing in skimpy swimwear.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X