60 கிலோ வீட்டை தோளில் சுமந்து ஊர் சுற்றும் ‘நத்தை மனிதர்‘
ஹாங்காங்: சீனா, ஹாங்காகில் வசிக்கும் ஒரு மனிதர் தனது 60 கிலோ வீட்டை, தான் போகும் இடங்களுக்கெல்லாம் தோளில் தூக்கிச் செல்கிறாராம். இதுவரை இவர் கடந்த மொத்தத் தொலைவு கிட்டத்தட்ட 435 கிலோமீட்டராம்.
நம்மூரில் காடாறு மாதம், நாடாறு மாதம் என வாழும் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையைக் கொண்ட மனிதர்கள் தான், எங்கும் தங்கிக் கொள்ளும் வகையில் வண்டியையே வீடாக வடிவமைத்து வைத்திருப்பார்கள்.
சில நடிகர், நடிகைகள் மற்றும் கோடீஸ்வரர்களும் இது பொன்ற நகரும் வீடுகளை வைத்திருப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அவை எல்லாம் பெரும்பாலும் வாகனங்களாகவே இருக்கும்.
ஆனால், இந்த சீனாக்காரர் ரொம்பவே வித்தியாசம்...

ஊர் சுற்றும் வாலிபன்...
சீனாவில் உள்ள குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்தவர் லியூ லிங்சாவோ. இவர் மூங்கில்கள் மற்றும் பொலிதீனினால் உருவாக்கிய தனது வீட்டை தோளில் சுமந்தே ஊர் சுற்றுகிறாராம்.

பாலீதின் வீடு....
இந்த பாலிதீன் மூங்கில் வீட்டின் எடை கிட்டத்தட்ட 60 கிலோ. தூக்கிச் சுற்றும் லியூவின் வயதோ 38.

யாது ஊரே... யாவரும் கேளிர்...
தன் வித்தியாசமான வீடு குறித்து லியூ கூறும்போது, ‘நான் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் தங்குமிட பிரச்சினை எனக்கில்லை நான் சுதந்திரமானவனாக உள்ளேன்' என்கிறார்.

இது மூணாவது....
ஆனால், இந்த வீட்டிலும் ஒரு குறைபாடு உள்ளதாம். அதாவது சுமார் ஒரு வருட காலம் மட்டுமே இவ்வீட்டை பயன்படுத்த முடியுமாம். இதுவரை 435 கிமீ சுற்றியுள்ள லியூ, தற்போது பயன் படுத்துவது மூன்றாவது மூங்கில் வீடாம்.

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா....
லியூ நடந்து செல்லும் போது, வழியில் கிடைக்கும் பிளாஸ்டிக் முதலான குப்பைகளை பொறுக்கி, அவற்றை விற்று வருமானம் பார்த்து வருமானம் ஈட்டிக் கொள்கிறார். இதன் மூலம் சுற்றுச்சூழலும் தூய்மையாவதில் அவருக்கு இரட்டிப்பு சந்தோஷமாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications