சாக்கு போக்குகள் எல்லாம் மோடி ஒரு தலைவராக உருவெடுப்பதை தடுத்துவிடாது...

Subscribe to Oneindia Tamil

Narendra modi
டெல்லி: கோவா தலைநகர் பனாஜியில் லோக்சபா தேர்தலுக்கான வியூகம் வகுக்க பாரதிய ஜனதா கட்சி முகாமிட்டுள்ளது. ஆனால் இதில் பங்கேற்காமல் சாக்குபோக்குகளை சில மூத்த பாஜக தலைவர்கள் கூறிவ்ருவதால் என்ன நடக்க வேண்டுமோ அதாவது பாஜகவில் மோடி ஒரு தலைவராக உருவெடுப்பது என்பது தவிர்க்க முடியாதது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

எதிர்வரும் லோக்சபா தேர்தலுக்கான முன் தயாரிப்பு நடவடிக்கைகளைப் பற்றி விவாதிக்கவே பாஜகவின் கோவா கூட்டம் நடைபெறுகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளால் அதன் தோழமைக் கட்சிகள் பலவும் கூட விலகியே நிற்கின்ற நிலையில் பாஜகவின் கோவா கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.

தற்போதைய நிலைமையில் பாஜகவில் ஒற்றுமையும் ஒருமித்த கருத்தும் அவசியமானது. ஆனால் நொண்டி சாக்குகளைக் கூறிக் கொண்டு சில மூத்த பாஜக தலைவர்கள் கோவா கூட்டத்தைப் புறக்கணித்திருக்கின்றனர். அதாவது நாம் இளம்பிராயத்தில் பொய்யாக எனக்கு உடநிலை சரியில்லை என்று கூறி லீவ் எடுப்பதைப் போல பாஜக தலைவர்கள் நடந்து கொண்டிருக்கின்றனர். மூத்த பாஜக தலைவர்களின் இந்த சாக்கு போக்குகள் அனைத்துமே பாஜகவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மகுடம் சூட்டி அவரை முன்னிலைப்படுத்தியே தேர்தலை சந்திக்க பாஜக தயாராகிவிட்டது என்பதையே வெளிப்படுத்துகிறது.

கட்சியின் முக்கிய கூட்டத்தில் கலந்து கொண்டு விவாதங்களில் பங்கேற்பதற்று ஒற்றுமையை வெளிப்படுத்தாமல் சிலர் கூட்டத்தைத் தவிர்க்கும் வழிமுறையைத் தேர்வு செய்திருக்கின்ற்ன்ர். பாஜகவின் துணைத் தலைவரான உமாபாரதி க்டந்த வியாழன்று தமக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி கோவா கூட்டத்தைப் புறக்கணித்தார். இதே பாணியை க்ட்சியின் மூத்த தலைவர் அத்வானியும் கடைபிடித்துள்ளார். ஆனால் இன்று அத்வானி கோவா வருவார் என்று கூறப்படுகிறது.

லோக்சபா தேர்தலுக்கான வியூகம் மட்டுமல்ல..பிரசாரக் குழுவின் தலைவர் யார் என்பதையும் முடிவு செய்யக் கூடிய கூட்டம்தான் கோவாவில் நடைபெறுகிறது. பாஜகவைப் பொறுத்தவரையில் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்பதற்கு வலுவான ஆதரவு வலுத்தும் வருகிறது. ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரக் குழுவின் தலைவராக மோடியையே நியமிக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக இருக்கின்றனர். ஆனால் அத்வானி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். எதிர்வரும் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு தனி குழு அமைக்க வேண்டும் என்று அத்வானி கோரியிருந்தார். ஆனால் இதை பாஜக நிராகரித்துவிட்டது.

இப்படி அப்படி என சாக்கு போக்குகள் மூலம் முட்டுக்கட்டை எல்லாம் போட்டாலும் நரேந்திர மோடி எனும் ஒரு தலைவர் உருவெடுப்பது என்பது தவிர்க்க முடியாது....என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+