30 வயது வீராங்கனைதான் புடினின் 30 வருட தாம்பத்ய வாழ்க்கைக்கு வேட்டு வைத்தவரா...?

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் தனது 30 வருட கால மனைவியை விட்டுப் பிரிவதாக அறிவித்து விட்டார். இதை தனது மனைவி லூத்மிலாவுடன் இணைந்து அறிவித்துள்ளார். இந்த பிரிவுக்குக் காரணம், 30 வயதாகும் முன்னாள் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை அலினா கபயேவாதான் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

அந்த வீராங்கனையுடன் புடினுக்கு உள்ள நெருக்கமான தொடர்புதான் மனைவியை பிரிய புடின் துணியக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

இந்த வீராங்கனையுடன் ரகசிய காதல் உறவில் புடின் நீண்ட காலமாக இருந்து வருகிறார் என்று ஏற்கனவே செய்திகள் அடிபட்டன. தற்போது புடின் பிரிவு அறிவிப்பைத் தொடர்ந்து இது உண்மைதானோ என்று ரஷ்யாவில் பேசப்படுகிறது.

எங்களது திருமணம் முடிந்தது

எங்களது திருமணம் முடிந்தது

தங்களது திருமண பந்தம் முடிவுக்கு வந்ததை புன்னகையுடன் லூத்மிலாவும், புடினும் சேர்ந்தே அறிவித்துள்ளனர்.

டிவி ஷோவில்

டிவி ஷோவில்

ஒரு டிவி ஷோ மூலமாக இந்த அறிவிப்பை வெளியிட்டனர் 60 வயதான புடினும், 55 வயதான லூத்மிலாவும்.

நீண்ட காலமாக சேரவில்லை

நீண்ட காலமாக சேரவில்லை

இந்த டிவி ஷோவின்போது நீண்ட காலமாகவே நீங்கள் இருவரும் சேர்ந்து வாழவில்லையாமே என்று புடினிடம் கேட்கப்பட்டது. அதற்கு புடின் உண்மைதான் என்றார்.

சேர்ந்து எடுத்த முடிவு

சேர்ந்து எடுத்த முடிவு

லூத்மிலா கூறுகையில் இது பொதுவான, இருவரும் இணைந்து எடுத்த முடிவு. எங்களது திருமணம் முடிவுக்கு வருகிறது. இருவரும் பார்த்துக் கொள்வதே இப்போது அரிதாகி விட்டது. எனவேதான் இந்த முடிவு என்றார்.

இது விவாகரத்தா...?

இது விவாகரத்தா...?

அப்படியானால் இருவரும் விவாகரத்து செய்துவிட்டீர்களா என்ற கேள்விக்கு லூத்மிலா பதிலளிக்கையில் இது 'civilised divorce' என்றார்.

காரணம் அலினா....?

காரணம் அலினா....?

புடின், தனது மனைவியைப் பிரிய அவரது நீண்ட கால ரகசியக் காதலியான ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை அலினா கபயேவா தான் காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

2 முறை ஒலிம்பிக்கில்

2 முறை ஒலிம்பிக்கில்

பல வருடமாகவே புடின் காதலில் இருந்து வரும் அலினா, ரஷ்யா சார்பில் 2 முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றழர். மாடலிங்கிலும் இருந்துள்ளார்.

குழந்தையும் உண்டாம்

குழந்தையும் உண்டாம்

புடினுடன் பழகிய நெருக்கம் காரணமாக அவரது குழந்தையையும் பெற்றுள்ளார் அலினா என்று இன்னொரு பேச்சும் உள்ளது.

5 வருடங்களுக்கு முன்பு

5 வருடங்களுக்கு முன்பு

5 வருடங்களுக்கு முன்புதான் புடின்- அலினா உறவு குறித்த செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்தியை அப்போது புடின் மறுத்திருந்தார். இந்த செய்திக்குப் பின்னர் அதை வெளியிட்ட செய்தித்தாள் திடீரென மூடப்பட்டு விட்டது. புடின் கோபத்துக்கு ஆளானதால் பேப்பரையே மூடி விட்டதாக கிசுகிசுக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+