12 ஆயிரம் டாலருக்கு ஏலம் போன லேடி காகாவின் ஒட்டு நகம்!

பாப் இசைப் பாடகி லேடி காகா மேடையில் பாடும் போது விதம் விதமான அலங்காரங்களினால் ரசிகர்களை கவர்வார். அவரது ஸ்டைலான கவர்ச்சியான உடலமைப்பு, மூலம் ரசிகர்களின் இதயங்களில் கனவுக் கன்னியாக இடம் பிடித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இவர் இசை நிகழ்ச்சி நடத்தியபோது கருப்பு நிற ஆடை அலங்காரத்துடன் அழகான ஒட்டு நகங்களையும் அணிந்து ஆடி, பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
நிகழ்ச்சி முடிந்து காகா மேடையை விட்டு இறங்கியதும் தனது 10 ஒட்டு நகங்களில் ஒன்று காணாமல் போனது தெரியவந்தது. இதனால் காகா கவலைப்பட்டார். அப்புறம் அதை மறந்துவிட்டு ஊருக்குப் போய்விட்டார்.
டப்ளனில் லேடி காகா நிகழ்ச்சி நடந்த மேடையை சுத்தம் செய்யும் ஊழியர் கையில் அந்த நகம் கிடைத்துள்ளது. அதனை கிட்டார் வாசிக்க பயன்படுத்தப்படும் 'ப்ளெக்ட்ரம்' என்று அதை முதலில் கருதிய அவர், பின்னர் லேடி காகாவின் ஒட்டு நகம் என்பதை அறிந்துக் கொண்டார்.
இணையதளத்தின் மூலம் அதை அந்த ஊழியர் ஏலம் விட்டார். லேடி காகாவின் தீவிர ரசிகர் ஒருவர் அந்த ஒட்டு நகத்தை 12 ஆயிரம் டாலர்களுக்கு ஏலத்தில் எடுத்தார். ஒரே ஒரு நகம் மூலம் 12 ஆயிரம் அமெரிக்க டாலர்களை சம்பாதித்துள்ளார் அந்த ஊழியர்.












Click it and Unblock the Notifications