அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு விஷக் கடிதம் அனுப்பிய நடிகை கைது

அதிபர் ஒபாமா வசிக்கும் வெள்ளை மாளிகைக்கு தினசரி ஏராளமான கடிதங்கள் வருகின்றன. அவற்றை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்திய பிறகே அதிபரின் பார்வைக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு வந்த கடிதத்தில் 'ரிசின்' என்ற கொடிய விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு பிரிவு (எப்பிஐ) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
இதேபோல் நியூயார்க் மேயர் மிச்சல் புளூம்பெர்க் அலுவலகத்துக்கு வந்த கடிதத்திலும் விஷம் தடவப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதனை அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபருக்கும், நியூயார்க் மேயருக்கும் விஷம் தடவிய கடிதம் அனுப்பியது, டெக்சாஸ் மாகாணம் நியூ பாஸ்டனில் வசிக்கும் நடிகை ஷான் ரிச்சர்ட்சன் (35) என்பது தெரிய வந்தது. கடந்த மே 20ம் தேதி அதிபர் ஒபாமாவுக்கு விஷம் தடவிய மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கு அவரது கணவர் உதவியாக இருந்தது தெரியவந்தது.
சந்தேகத்தின் பேரில் எப்பிஐ போலீசார் நடிகை ஷான் ரிச்சர்ட்சனை கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது விஷம் தடவிய கடிதம் அனுப்பிய விபரம் தெரிய வந்தது. ஆனால் ரிச்சர்ட்சன் இதை மறுத்துள்ளார். இவர் தற்போது கர்ப்பிணியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications