திட்டக்குடிக்கு பதில் ராமநத்தத்தில் தேமுதிக கண்டன பொதுக்கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி
கடலூர்: தேமுதிக பொதுக் கூட்டம் அவர்கள் விரும்பியவாறு திட்டக்குடியில் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால் ராமநத்தத்தில் கூட்டத்தை நடத்த அனுமதி அளித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகர தேமுதிக சார்பில் மின்வெட்டு பிரச்சனை, சட்டம் ஒழுங்கு மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து திட்டக்குடியில் இன்று மாலை கண்டன பொதுக் கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் திட்டக்குடியில் கூட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து தேமுதிக நிர்வாகிகள் மாவட்ட எஸ்.பி. ராதிகாவை சந்தித்து பொதுக் கூட்டம் நடத்த அனுமதி அளிக்குமாறு கேட்டனர். ஆனால் அவரும் அனுமதி அளிக்க மறுத்தார். பின்னர் கூட்டத்தை அருகில் உள்ள ஊரான ராமநத்தத்தில் நடத்த தேமுதிகவினர் அனுமதி கேட்டனர். அங்கு கூட்டத்தை நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
எனவே கண்டன பொதுக் கூட்டம் திட்டமிட்டபடி இன்று மாலை நடக்கும். ஆனால் திட்டக்குடிக்கு பதிலாக ராமநத்தத்தில் நடக்கும். இந்த கூட்டத்தில் மாநில பொருளாளர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் சபா சசிகுமார், மாவட்ட பொருளாளர் அணி செயலாளர் உமாநாத் ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications