அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜெ.: மைத்ரேயன் மீண்டும் போட்டி
சென்னை: மாநிலங்களை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 6 பேரின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை சென்னையில் துவங்கியது.

இந்நிலையில் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு,
1) மைத்ரேயன் (அதிமுக மருத்துவ அணித் தலைவர்), 2) அர்ச்சுனன் (நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர்), 3) ரத்தினவேலு (திருச்சி புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர்), 4) லட்சுமணன் (விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர்), 5) சரவணப் பெருமாள் (அதிமுக மாணவரணி செயலாளர்).
இதில் மைத்ரேயன் ஏற்கனவே மாநிலங்களை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications