அத்வானி சிக்கல் சீக்கிரம் தீரும்.. 'சங்கத்தை' குறை சொல்லாதீங்க - பாஜக
டெல்லி: அத்வானி சிக்கலுக்கு சீக்கிரமே தீர்வு காணப்படும். இதற்கும் சங் அமைப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாஜக கூறியுள்ளது.
நரேந்திரமோடி விவகாரத்தை வைத்து பாஜகவில் பூகம்பம் வெடித்துள்ளது. அத்வானியும் அவரதுஆதரவு தலைவர்களும் செம கடுப்பாகியுள்ளனர். அத்வானி கட்சிப் பொறுப்புகளை உதறி விட்டார். இது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக கூட்டணிக் கட்சிகளும் போர்க்குரல் எழுப்பத் தொடங்கியுள்ளன. இதனால் பாஜக தலைமை பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. இந்தநிலையில் அத்வானி சிக்கலுக்கு விரைவிலேயே தீர்வு ஏற்படும். இதற்கும் ஆர்.எஸ்.எஸ்,ஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாஜக தெரிவித்துள்ளது.

சீக்கிரமே நல்ல செய்தி வரும்
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், அத்வானி விவகாரம் சீக்கிரமே முடிவுக்கு வரும். விரைவில் நல்ல செய்தி வரும் என்றார்.

ஆர்.எஸ்.எஸ்.தான் காரணமா....
இந்த விவகாரத்திற்கு ஆர்.எஸ்.எஸ்.தான் காரணமா என்ற கேள்விக்கு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.

அதெல்லாம் சரியில்லை
இதுகுறித்து சிங் கூறுகையில், ஆர்.எஸ்.எஸ்ஸை இதில் இழுப்புது சரியல்ல. ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார் ராஜ்நாத் சிங்.

அத்வானி வீட்டில் குவியும் தலைவர்கள்
இதற்கிடையே, இன்று பாஜகமூத்த தலைவர்கள் பலரும் அத்வானியை அவரது வீட்டில் சந்தித்து ராஜினாமா முடிவை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தினர்.

பெரும் வருத்தத்தில் அத்வானி
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் போக்கால் அத்வானி பெரும் மன வேதனை அடைந்திருப்பதாக அவரது தரப்பினர் குமுறுகின்றனர்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications