ராஜஸ்தான் நபருக்கு வந்த ஸ்டாஃப் செலக்ஷன் தேர்வு ஹால் டிக்கெட்டில் ஒபாமா போட்டோ
ஜெய்பூர்: ராஜஸ்தானில் பள்ளி உரிமையாளர் ஒருவருக்கு மத்திய அரசு நடத்தும் ஜூனியர் என்ஜினியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் புகைப்படம் இருந்துள்ளது. இதில் விந்தை என்னவென்றால் அவர் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கவே இல்லை.
ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டம் ராம்பாஸ் கிராமத்தில் பள்ளி ஒன்றை வைத்து நடத்தி வருபவர் லாலு ராம் மீனா(40). அவருக்கு கடந்த 8ம் தேதி கடிதம் ஒன்று வந்தது. அதை பிரித்துப் பார்த்த அவர் அதிர்ந்து போனார். காரணம் மத்திய அரசின் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் ஜூனியர் என்ஜினியர்களுக்கான தேர்வுக்கான ஹால் டிக்கெட் வந்திருந்தது.

அதில் அவரது பெயர் தெளிவாக இருந்தது. அவருக்கு பதர்பூரில் உள்ள துக்லகாபாத் மெட்ரோ நிலையத்திற்கு அருகில் உள்ள மையத்தில் தேர்வு எழுத வேண்டும் என்று இருந்தது. அந்த ஹால் டிக்கெட்டில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் புகைப்படம் இருந்தது. தான் விண்ணப்பிக்காத தேர்வுக்கு ஒபாமா புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட் வந்ததில் ராம் அதிர்ச்சி அடைந்தார். அவரது பிறந்தநாள் 01-01-1973 ஆகும். ஆனால் ஹால் டிக்கெட்டில் 05-10-1987 என்று இருந்தது.
இது குறித்து ராம் கூறுகையில்,
நான் அந்த பதவிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கவே இல்லை. அப்படி இருக்கையில் ஹால் டிக்கெட் வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஒபாமா புகைப்படத்திற்கு கீழ் ஒரு கையெழுத்து இருந்தது. அது என்னுடையது இல்லை என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications