Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாயகம் காக்க தாரீர் நிதி... வைகோ வேண்டுகோள்!

Subscribe to Oneindia Tamil

Vaiko seeks fund to run his party
சென்னை: "வர இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கும், கழகத்தின் அன்றாடப் பணிகளுக்கும், தலைமைக் கழக அலுவலகமாம் தாயகத்தை இயக்குவதற்கும் பணம் தேவைப்படுகின்றது. தங்களால் இயன்ற நிதியைக் கனிவோடு தாரீர்"என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திராவிட இயக்கத்தின் இலட்சியப் பரிணாமமாகத் தலைநிமிர்ந்து நிற்கிறது மறுமலர்ச்சி தி.மு.க. தமிழ்க் குலத்தை எங்கெல்லாம் துன்பம் தாக்குகின்றதோ, அதைத் தடுக்க, முனைமுகத்து முதற்சிப்பாயாகக் களத்தில் நிற்கின்றோம்.

தமிழக அரசியலில், எத்தனையோ தடைகள், இருட்டடிப்புகளை எதிர் கொண்டு, இருபது ஆண்டுகளாக, தமிழகத்தின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கப் போராடி வரும் நாங்கள், இமயம் நிகர்த்த சாதனைகளைச் செய்து இருக்கின்றோம்.

முல்லைப்பெரியாறு அணை காக்க காவிரி, தென்பெண்ணை, பாலாறு உரிமை காக்க, கூடங்குளம் அணு உலையை அகற்ற நொறுங்கிக் கிடக்கும் விவசாயிகளின் துயர் துடைக்க, சுற்றுச் சூழலை பாதுகாக்க, தமிழகத்தை நாசமாக்கி வருகின்ற, மக்களின் வாழ்வைச் சீரழித்து வருகின்ற மது எனும் நச்சுச் சுழலில் இருந்து நம் தாயகத்தை மீட்க அறப்போர் நடத்தி வருகின்றோம்.

வர இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கும், கழகத்தின் அன்றாடப் பணிகளுக்கும், தலைமைக் கழக அலுவலகமாம் தாயகத்தை இயக்குவதற்கும் பணம் தேவைப்படுகின்றது. தங்களால் இயன்ற நிதியைக் கனிவோடு தாரீர். தங்களைச் சந்திக்க வருகின்ற கழகத் தோழர்களிடம் நிதி தரலாம் அல்லது காசோலையாகவோ, வங்கி வரைவோலையாகவோ பொதுச்செயலாளர் ம.தி.மு.க. என்ற பெயருக்குத் தரலாம்.

அதை, கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அத்துடன், தங்களது பெயர், முகவரி, அலைபேசி எண், வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் ஆகிய விவரங்களையும் எழுதி அனுப்புங்கள் எனது கையொப்பம் இட்ட ரசீது, உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தாயகம், 12, ருக்மணி இலட்சுமிபதி சாலை, எழும்பூர், சென்னை 600 008 தொலைபேசி; 0442851 6565; 2851 6566." என்று அதில் தெரிவித்துள்ளார். இவ்வாறு வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+