நான் எப்பொழுது பவுலிங் பண்ணாலும் இடுப்பில் துண்டு இருக்கும்: ஸ்ரீசாந்த்
டெல்லி: நான் எப்பொழுது பந்து வீசினாலும் இடுப்பில் துண்டு வைத்திருப்பேன் என்று ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்தார்.
ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்தது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சாண்டிலா ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் அங்கீத் சவான் மற்றும் ஸ்ரீசாந்த் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சாண்டிலா ஜாமீன் கோரவில்லை.

நேற்று மாலை சிறையில் இருந்து வெளியே வந்த ஸ்ரீசாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என் இடுப்பில் துண்டை வைத்திருந்தது தரகரக்களுக்கு நான் கொடுக்கும் சிக்னல் அல்ல. நான் எப்பொழுது பந்து வீசினாலும் இடுப்பில் துண்டு வைத்திருப்பேன். என் வாழ் நாள்முழுவதும் நான் விளையாடியுள்ள போட்டிகளில் முழுமனதோடு விளையாடியுள்ளேன். எனக்கு ஆதரவு அளித்த ராஜஸ்தானுக்கு நன்றி. சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை சிறையில் உள்ள டிவியில் பார்த்தேன். இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யும்போது அதில் நான் இருப்பேன் என்று நம்புகிறேன். என்னால் மீண்டும் இந்தியாவுக்காக விளையாட முடியும். திகார் சிறையில் இருந்து வெளியே வந்த நிமிடம் தான் மகிழ்ச்சியானது.
நான் நிரபராதி என்பது நிரூபிக்கப்படும். நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்றார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications